தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கவுன்சிலிங் தொடங்கவுள்ள நிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கின் முதல் சுற்று முடிவடைந்து, இரண்டாம் சுற்று தொடங்கியுள்ளது. சாய்ஸ் ஃபில்லிங் முடிவடைந்து இருக்கை ஒதுக்கீட்டிற்கான செயல்முறை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரண்டாம் சுற்றில் எந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் வரை இடங்கள் கிடைக்கும் என எவர்கிரீன் கைடன்ஸ் யூடியூப் சேனல் விளக்கியுள்ளது.
இரண்டாம் சுற்றுக்கு எதிர்ப்பார்க்கப்படும் ரேங்க் மற்றும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 502
ரேங்க் – 6300
பி.சி
கட் ஆஃப் – 485 - 487
ரேங்க் – 4100 - 4150
பி.சி.எம்
கட் ஆஃப் – 483 - 485
ரேங்க் – 375 - 385
எம்.பி.சி
கட் ஆஃப் – 476 - 478
ரேங்க் – 2000 - 2050
எஸ்.சி
கட் ஆஃப் – 390 - 392
ரேங்க் – 1380 - 1410
எஸ்.சி.ஏ
கட் ஆஃப் – 310
ரேங்க் – 325 - 330
எஸ்.டி
கட் ஆஃப் – 283 - 286
ரேங்க் – 105 - 110
இந்த ரேங்கில் 10 ரேங்க் வரை மாறுபாடு இருக்கலாம். அதுபோல் கட் ஆஃப் மதிப்பெண்களில் இரண்டு மதிப்பெண் கூடுதலாகவோ குறைவாகவோ வரலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“