தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கவுன்சலிங் நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் படிக்க வாய்ப்புள்ள டாக்டருக்கு இணையான மருத்துவ படிப்புகள் குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
12 ஆம் வகுப்பு படித்து முடித்த பெரும்பாலான மாணவர்களின் கனவு டாக்டர் ஆக வேண்டும் என்பது தான். இதற்காக கடினமாக பயிற்சி எடுத்து நீட் தேர்வை எழுதுகின்றனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அதிகமான மதிப்பெண்கள் எடுத்தால் தான் எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும். இருப்பினும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களும் டாக்டர் ஆகலாம். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் தவிர இந்திய மருத்துவ படிப்புகள் மூலம் டாக்டர் ஆகலாம்.
இந்தநிலையில், இந்த இந்திய மருத்துவ படிப்புகள் குறித்து கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார். இந்திய மருத்துவ படிப்புகளில் மொத்தம் 5 படிப்புகள் உள்ளன. இதில் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, இயற்கை மற்றும் யோகா மருத்துவம் ஆகியவை உள்ளன.
Advertisment
Advertisements
BSMS - Bachelor of Siddha Medicine and Surgery
BAMS - Bachelor of Ayurveda Medicine and Surgery
BHMS - Bachelor of Homeopathy Medicine and Surgery
BUMS - Bachelor of Unani Medicine and Surgery
BNYS - Bachelor of Naturopathy and Yoga Science
இந்தப் படிப்புகளில் இயற்கை மற்றும் யோகா மருத்துவத்திற்கு நீட் மதிப்பெண் தேவையில்லை. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை நடைபெறும். மற்ற படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் தேவை. அதுவும் சில பிரிவுகளுக்கு நீங்கள் தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தாலே இடம் கிடைக்கும்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கை
அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை – 100
அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை – 50
அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, கோட்டார், நாகர்கோவில் – 50
அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, சென்னை – 26
அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, திருமங்கலம், மதுரை – 50
அரசு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, சென்னை – 50
இதுதவிர சில தனியார் கல்லூரிகளும் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன. இவற்றிலும் சில தனியார் கல்லூரிகள் டாப் இடங்களில் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil