தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்; எந்த ரேங்க் வரை சீட் கிடைக்கும்?
தமிழ்நாடு நீட் கவுன்சிலிங் 2024: அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு எந்த ரேங்க் வரை சீட் கிடைக்கும் முழு விவரம் இங்கே
மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் எந்த ரேங்க் வரை சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
மருத்துவ கவுன்சலிங் கமிட்டி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை நடத்துகிறது. நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் ஆகஸ்ட் 14 முதல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு எந்த ரேங்க் வரை சீட் கிடைக்கும் என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பொதுப் பிரிவினருக்கு 747 ரேங்க் முதல் எஸ்.சி பிரிவினருக்கு 9397 ரேங்க் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், பொதுப் பிரிவினருக்கு 3495 ரேங்க் முதல் எஸ்.சி பிரிவினருக்கு 15152 ரேங்க் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் பொதுப் பிரிவினருக்கு 3936 ரேங்க் முதல் எஸ்.சி பிரிவினருக்கு 46511 ரேங்க் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
இதேபோல் ஒவ்வொரு கல்லூரிக்குமான ரேங்க் விபரங்கள் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் காலியிட சுற்றில் கூட நிறைய பேருக்கு கடந்த ஆண்டுகளில் இடம் கிடைத்துள்ளது. எனவே மாணவர்கள் கவனமாக செயல்பட்டால், தமிழகத்திலே அதுவும் அரசுக் கல்லூரியிலே அகில இந்திய ஒதுக்கீடு மூலம் எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பை பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“