Advertisment

நீட் தேர்வு: கட் ஆஃப், அகில இந்திய கோட்டா அட்மிஷன் வழிமுறைகள் இவைதான்!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கவுன்சிலிங் செயல்முறைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இதில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு கடந்த ஆண்டின் கட்ஆஃப் மார்க்கை இங்கே பாருங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Medical admission process begins in TN

மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் (File)

மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி (MCC)சார்பாக நீட் 2021 கவுன்சிலிங்கை DGHS ஆண்டுதோறும் நடத்துகிறது. ஆன்லைனில் நடைபெறும் நீட் கவுன்சிலிங் இரண்டு சுற்றுகளாக நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, மாப் அப் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த சுற்றானது டீம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், இஎஸ்ஐசி கல்லூரிகள் ஆகியவற்றில் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது.

Advertisment

நீட் அகில இந்திய ஒதுக்கீடு (AIQ)செயல்முறையை கீழே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

  1. அனைத்து அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 15% இடங்களுக்கான சேர்க்கை
  2. டீம் பல்கலைக்கழகங்கள்/மத்திய பல்கலைக்கழகங்கள்/பணியாளர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் (Employees’ State Insurance Corporation) ஆகியவற்றில் உள்ள அனைத்து இடங்களுக்கும் தான். இதில், டெல்லி பல்கலைக்கழகம் (DU), BHU, AMU ஆகியவையும் அடங்கும்.
  3. எய்ம்ஸ் & ஜிப்மரில் சேரலாம்.
  4. புனேவில் MCC, AFMC நடத்தும் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் (AFMC) சேரலாம்.

நீட் 2021 கவுன்சிலிங் தகுதி மதிப்பீடு

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கவுன்சிலிங் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இதில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

கவுன்சிலிங் செயல்முறை

step 1: ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்
step 2: கவுன்சிலிங் கட்டணம் செலுத்த வேண்டும்.
step 3: இருக்கை தேர்வு செய்து லாக் செய்ய வேண்டும்.
step 4: சீட் ஓதுக்கிடு செய்யப்பட்டதாகத் தகவல் கிடைக்கும்.
step 5: இருக்கை ஒதுக்கப்பட்ட கல்லூரிக்குத் தகவல் தெரிவிப்பது.

நீட் கட்ஆஃப் 2021

கல்லூரியில் குறைந்தபட்ச மார்க் கொண்ட மாணவனை இணைக்கும் கடைசி சேர்க்கை தான் கட்ஆஃப் மதிப்பெண் எனக் கூறப்படுகிறது. இந்த கட்ஆஃப் ஆண்டுதோறும் மாறுபடும். அவை தேர்வின் கடின நிலை, சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, சீட் அளவு உட்பட பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களால் மாற்றப்படுகிறது.

மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளின் முந்தைய ஆண்டு நீட் கட்ஆஃப் மதிப்பெண் பார்த்துக்கொண்டால் சேர்க்கைக்கு எளிதாக இருக்கும். சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்குக் கடந்த ஆண்டின் கட்ஆஃப் மார்க் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி நீட் கடைசி ரேங்க் நீட் மதிப்பெண்

எய்ம்ஸ், டெல்லி - 51 - 701

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி மருத்துவ அறிவியல் நிறுவனம் - 970 -- 675

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி புதுச்சேரி நிறுவனம் - 239 -- 690

கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம், லக்னோ - 1800 - 665

ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலிகார் - 4667 - 646

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை - 934 --- 675

மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, டெல்லி - 90 -- 700

வர்த்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, டெல்லி - 163 --- 695

லேடி ஹார்டிங் மகளிர் மருத்துவக் கல்லூரி, டெல்லி - 571 ---- 681

எய்ம்ஸ், ஜோத்பூர் - 790 ---- 676

நீட் 2021 தேர்வு கடந்த செப்டம்பர் 12 அன்று 13 மொழிகளில் நடத்தப்பட்டது. நீட் என்பது இந்தியாவில் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் B.V.Sc மற்றும் AH கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வாகும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Neet Medical Admission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment