பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பலருடைய கனவு டாக்டராக வேண்டும் என்பதுதான். அதனால், எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்வதற்கு பெரிய போட்டி நிலவுகிறது. எம்.பி.எஸ் சேர வேண்டும் என்றால், பிளஸ் 2 தேர்ச்சி பெறுவதோடு நீட் தேர்வில் உரிய மதிப்பெண் எடுக்க வேண்டும்.
எம்.பி.பி.எஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (செப்டம்பர் 8) அதிகாலை வெளியானது. மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் பலரும் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நீட் கட் ஆஃப் மதிப்பெண் என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, நீட் தேர்வு முடிவுகள் குறித்தும், தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் மதிப்பெண் எஸ்சி, எஸ்டி, எம்.பி.சி, பி.சி என கோட்டா வாரியாக எப்படி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தனது ‘கரியர் கய்டன்ஸ்’ என்ற யூடியூப் சேனலில் நீட் தேர்வு முடிவுகள் மற்றும் இந்த ஆண்டு தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் மதிப்பெண் எப்படி இருக்கும் என்று அலசி மாணவர்களுக்கு வழிகாட்டி அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இது குறித்து ஜெயபிரகாஷ் காந்தி கூறியிருப்பதாவது: “இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 மாணவர்கள் விண்ணப்பித்தனர். 17 லட்சத்து 64 ஆயிரத்து 751 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட, நீட் தேர்வில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1 லட்சம் 22 ஆயிரத்து 995 மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் மாணவர்கள் எம்.பி.பி.எஸ் சேர்வதில் கடுமையான ஒரு போட்டியை உருவாக்கும்” என்று கூறுகிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வுக்கு 1 லட்சத்து 49 ஆயிரத்து 89 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1 லசத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 67 ஆயிரத்து 787 மாணவர்கள் தேச்சி பெற்றுள்ளனர். அதாவது, இந்த ஆண்டு 51.28 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வில், 54.8 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 51.28% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், ஆனால், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டைவிட 8,865 மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், கடந்த ஆண்டு பொதுப்பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் மதிப்பெண் 138 மதிப்பெண்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் 117 மதிப்பெண் ஆக உள்ளது.
மேலும், எஸ்சி. எஸ்டி, ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் மதிப்பெண் 108 மதிப்பெண் இருந்த நிலையில், இந்த ஆண்டு 93 மதிப்பெண் ஆக உள்ளது என்று ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"