MBBS counselling round 3: சீட் அதிகரிப்பால் கட் ஆஃப் இந்த அளவுதான் குறையும்; உஷார் மாணவர்களே!

எம்.பி.பி.எஸ். சீட் அதிகரிப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கணிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், அதன் நிலவரம் மற்றும் கட்-ஆஃப் எதிர்பார்ப்புகள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

எம்.பி.பி.எஸ். சீட் அதிகரிப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கணிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், அதன் நிலவரம் மற்றும் கட்-ஆஃப் எதிர்பார்ப்புகள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

author-image
Meenakshi Sundaram S
New Update
mbbs students

MBBS counselling round 3: சீட் அதிகரிப்பால் கட் ஆஃப் இந்த அளவுதான் குறையும்; உஷார் மாணவர்களே!

நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்புக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின் 3வது சுற்றுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 600 இடங்கள் அதிகரித்து உள்ளன. இந்த திடீர் அதிகரிப்பால் கட்-ஆஃப் மதிப்பெண்கள் எந்த அளவுக்குக் குறையும், இதனால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சீட் அதிகரிப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கணிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், அதன் நிலவரம் மற்றும் கட்-ஆஃப் எதிர்பார்ப்புகள் குறித்து வி.ஜே. அலர்ட் என்ற யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ள தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

Advertisment

600 சீட்டுகள் அதிகரித்த கல்லூரிகள் விவரம்

ரவுண்ட் 3 கலந்தாய்வுக்கு மொத்தமாக 600 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் இடங்களைப் பெற்ற கல்லூரிகள் மற்றும் எண்ணிக்கை விவரம். தாகூர் கல்லூரியில் 100 இடங்களும், அன்னை கல்லூரியில் 100, அருணா கல்லூரி 100, பனிமலர் கல்லூரி 50, சீனிவாசன் 100, சென்ட் பீட்டர்ஸ் 100, விவேகானந்தா 50, தக்ஷசீலா 50 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

600 சீட்டுகள் அதிகரித்ததால் கட்-ஆஃப் மிகவும் அதிகமாகக் குறைந்துவிடும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால், இந்த 600 சீட்டுகளும் பல பிரிவுகளுக்குப் பிரிக்கப்படும்போது, பொதுக் கலந்தாய்வுக்குக் (Self-Financing Quota) கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கை குறையும். நிர்வாக ஒதுக்கீடு (Management Quota: இந்த 600 சீட்டுகளில் ஒரு பகுதி நிர்வாக ஒதுக்கீட்டுக்குச் செல்லும். இதில் NRI மற்றும் லேப் சீட்டுகள் போன்றவையும் அடங்கும். பனிமலர் போன்ற கல்லூரிகளில் கிறிஸ்டியன் மைனாரிட்டி இடங்களும், சீனிவாசன் போன்ற கல்லூரிகளில் தெலுங்கு மைனாரிட்டி இடங்களும் பிரிக்கப்படும். தனியார் பல்கலைக்கழக ஒதுக்கீடு, புதிதாகத் திறக்கப்பட்ட தக்ஷசீலா போன்ற தனியார் பல்கலைக்கழக இடங்கள் அதன் தனி ஒதுக்கீட்டில் செல்லும். எனவே, 600 சீட் அதிகரித்திருந்தாலும், அது நேரடி அரசு இடங்களுக்கோ அல்லது பொதுவான சுயநிதி இடங்களுக்கோ முழுமையாகச் செல்லாது என்பதால், கட்-ஆஃப் குறையும் வேகம் குறைவாகவே இருக்கும்.

                                                                                                          ரவுண்ட் 2 கட்-ஆஃப் விவரம்

கம்யூனிட்டிமதிப்பெண் (Mark)
OC (ஓசி)475
BC (பிசி)472
BCM (பிசிஎம்)468
MBC (எம்.பி.சி)468
SC (எஸ்.சி)407
SCA (எஸ்.சி.ஏ)354
ST (எஸ்.டி)362
நிர்வாக ஒதுக்கீடு420
Advertisment
Advertisements

நிர்வாக ஒதுக்கீட்டில் கட்-ஆஃப் 420-ல் முடிந்திருந்தாலும், 419 முதல் 400 மதிப்பெண்களுக்குள் சுமார் 1606 மாணவர்கள் உள்ளனர். அதேபோல், 419 முதல் 390 மதிப்பெண்களுக்குள் மொத்தம் 2394 மாணவர்கள் உள்ளனர். இந்த மாணவர் எண்ணிக்கைக்கு மத்தியில், 600 சீட்டுகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்குப் பிரிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், 420-க்குக் கீழ் கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் வாய்ப்பு மிகக் குறைவாகும். குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அதிகக் கட்-ஆஃப் குறைவை எதிர்பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ரவுண்ட் 3 கட்-ஆஃப் எதிர்பார்ப்பு

சீட் அதிகரிப்பையும், ரவுண்ட் 2 கட்-ஆஃபையும் கணக்கில் கொண்டால், ரவுண்ட் 3-ல் கட்-ஆஃப் அதிகபட்சமாகக் குறையக்கூடிய நிலை குறித்த எதிர்பார்ப்பு (Prediction) உள்ளது. இது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமே என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்:

கம்யூனிட்டிஎதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் 
OC (ஓசி)472
BC (பிசி)469
BCM (பிசிஎம்)465
MBC (எம்.பி.சி)465
SC (எஸ்.சி)403
SCA (எஸ்.சி.ஏ)448
ST (எஸ்.டி)358

முக்கிய குறிப்பு: ரவுண்ட் 3 கலந்தாய்வு என்பது மிக முக்கியமானது. ஒருமுறை சீட் ஒதுக்கப்பட்டால், அதிலிருந்து வெளியேற முடியாது (Withdrawal Option இருக்காது). எனவே, மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கட்டணம் செலுத்த முடியும் என்றால், கட்டாயமாகச் சீட் கிடைப்பதற்கு வாய்ப்புள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் (Private Universities) முன்னுரிமை அளிக்கலாம்.

Neet Educational News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: