Advertisment

தமிழ்நாடு மருத்துவ சேர்க்கை; நீட் கட் ஆஃப் 10 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்பு

NEET cutoff may decrease 10 marks in Taminadu MBBS admissions: மருத்துவ இடங்களின் எண்ணிக்கை அதிகரிகப்பு; தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் கட் ஆஃப் 10 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்பு

author-image
WebDesk
New Update
vanniyar reservation, vanniyar 10.5% reservation, vanniyar 10.5% internal reservation, வன்னியர் உள் இடஒதுக்கீடு, 10.5% வன்னியர் உள் இடஒதுக்கீடு, எம்பிபிஎஸ், பொறியியல், சட்டம், 10.5% வன்னியர் உள் இடஒதுக்கீடு அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு, vanniyar reservation will implement in mbbs and engineering and law admissions, mbbs admisson, engineering admission, law admission, tamil nadu govt

தமிழகத்தில் இளங்கலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Advertisment

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) தமிழ்நாட்டு மாணவர்களின் செயல்திறனில் ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், 2021 ஆம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் தமிழ்நாட்டில் MBBS சேர்க்கைக்கான கட்-ஆஃப் குறைந்தது 10 மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்-ஆஃப் குறைந்துள்ளது இதுவே முதல்முறை. தேசிய தேர்வு முகமையின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு 205 மதிப்பெண்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 235 தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 500க்கு மேல் மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 2021ல் 5,148 ஆகவும் 2020ல் 5,240 ஆகவும் உள்ளது. 2021ல் 450க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 2020ல் 8,316 ஆகவும் 2020ல் 8,319 ஆகவும் உள்ளது.

தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் 1,450 எம்பிபிஎஸ் இடங்கள் என கூடுதல் MBBS இடங்களால் கட் ஆஃப் இந்த ஆண்டு குறையலாம். அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பொதுப் பிரிவு கட்-ஆஃப் 2020ல் 598ல் இருந்து இந்த ஆண்டு 585 ஆகக் குறையலாம். அதேபோல் BC, MBC உள்ளிட்ட பிற பிரிவுகளுக்கான கட்-ஆஃப் 15 மதிப்பெண்கள் வரை குறையலாம். மேலும், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 2021-ல் 200 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதாவது 2020-ஐ விட 50 பேர் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள். மேலும், மூன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், ஒரு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இளங்கலை மருத்துவ படிப்புகளைத் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் கட் ஆஃப் குறையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் இப்போது AIIMS மற்றும் JIPMER போன்ற மத்திய நிறுவனங்களில் சேர விரும்புகின்றனர். அதேநேரம், அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகமானோர் இடங்களைத் தேர்வு செய்தால், கட்-ஆஃப் மேலும் குறையக்கூடும். ஆனால் அவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தால் தவிர அவர்கள் விரும்பும் கல்லூரியைப் பெற முடியாது. சென்னை மருத்துவக் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான கட்-ஆஃப் அதிகமாக இருக்கும், ஏனெனில் அங்குள்ள இடங்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் கட்-ஆஃப் குறைய வாய்ப்பில்லை. 1,500 அரசு மருத்துவ இடங்களில், சுமார் 100 இடங்கள் 7.5% சிறப்பு இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும். எனவே, இது கட்-ஆஃப் மதிப்பெண்ணை பெரிய அளவில் குறைக்காது. ஆனால், அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை செலுத்த அரசு உறுதியளித்துள்ளதால் சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் சேரலாம். கடந்த ஆண்டு 400 அரசு பள்ளி மாணவர்கள் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ் இடங்களைப் பெற்றுள்ளனர். என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment