நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் எத்தனை கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
நீட் தேர்வு எழுதி தகுதி பெற்றுள்ள மாணவர்கள் 4 கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழக மாணவர்கள் முதலில் தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 85% அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படும். மேலும் மேனேஜ்மெண்ட் கோட்டா சீட்களும் இதன்மூலமாக நிரப்பப்படும். மேனேஜ்மெண்ட் கோட்டாவிற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
அடுத்தது அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கவுன்சலிங் கமிட்டியின் கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 15% இடங்கள், அரசு நிதியுதவி பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், இராணுவ மருத்துவ கல்லூரியில் உள்ள இடங்கள் ஆகியவை இதன் மூலம் நிரப்பப்படும்.
அடுத்து பிற மாநில மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு விண்ணப்பிக்கலாம். உதாரணமாக புதுச்சேரி சென்டாக் கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம். இப்படியாக மாணவர்கள் 4 கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“