நீட் தேர்வு எளிமையாக இருந்ததா என்று மாணவர்களிடம் கேட்டதற்கு ஈசியாக இருந்தது என்று சில மாணவர்களும், சிலகேள்விகள் அவுட் ஆப் சிலபஸ் ஆக இருந்ததால், கடினமாக இருந்ததாக சில மாணவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
12ம் வகுப்பு முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் நேற்று ( மே 5ம் தேதி) நடைபெற்றது. 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். உடை கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், நீட் தேர்வு எவ்வாறு இருந்தது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில்கள்..
கோல்கட்டா கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி டெபாராதி ஹால்டர், இயற்பியல் பகுதிகள் கடினமாக இருந்தது, வேதியியல் மற்றும் உயிரியல் பகுதிகள் எளிமையாக இருந்தன.
தத்தாரேயா முகர்ஜி கூறியதாவது, இயற்பியல் பகுதிகள் மிக கடினமாக இருந்தது, மற்ற பகுதிகள் எளிமையாகவே இருந்தன.
கோல்கட்டா கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் அம்ரித்லால் கோஸ்வாமி கூறியதாவது, நீட் தேர்வு பெரும்பாலும் எளிமையாகவே இருந்தது. வேதியியில் பிரிவில் இடம்பெற்றிருந்த கணிதம் தெடர்பான பகுதிகள் எளிதாக விடை காணும்படி இருந்தன. இயற்பியல் பகுதியில் சதவீத கேள்விகள் குவாண்டம் மெக்கானிக்ஸ் பகுதியிலிருந்து இடம்பெற்றிருந்தது. அதாவது, 45 சதவீத கேள்விககள் எளிமையாகவும், 35 சதவீத கேள்விகள் நடுநிலையாகவும் மற்றும் 20 சதவீத கேள்விகள் கடினமாகவும் இருந்ததாக அவர் கூறினார்.
வேதியியல் ஆசிரியர் மவூவா முகர்ஜி கூறியதாவது, வேதியியல் பிரிவில் கேள்விகள் 11 மற்றும் 12ம் வகுப்பு சிலபசிலிருந்தே அதிகம் கேட்கப்பட்டிருந்தன. சிலகேள்விகள் NCERT அடிப்படையிலதனாகக இருந்தது. சில கேள்விகள் அவுட் ஆப் சிலபஸ் ஆக இருந்தது.
உயிரியல் ஆசிரியர் அம்ரிதான்சு மித்ரா கூறியதாவது, உயிரியல் பிரிவில் பெரும்பாலான கேள்விகள்Psychology, Reproduction, Genetics, Molecular Biology, Ecology பிரிவுகளில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன.இந்த கேள்விகள் NCERT அடிப்படையிலதனாகக இருந்தது. 58 கேள்விகள் 12ம் வகுப்பிலிருந்தும், 35 கேள்விகள் 11ம் வகுப்பு சிலபசிலிருந்தும் கேட்கப்பட்டிருந்தன.
கல்வியாளர் நவீன் சி ஜோஷி கூறியதாவது , 7 முதல் 8 கேள்விகள் கடந்தாண்டு வினாத்தாள் மற்றும் NCERT புத்தகத்திலிருந்து நேரடியாக கேட்கப்பட்டிருந்தது. NCERT பிரிவு மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு.
இயற்பியல் பிரிவு எளிமை, வேதியியல் சற்று கடினம், தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவில் இருதரப்பு பதில்களும் மாணவர்களிடமிருந்து வருவதாக ஜோஷி கூறினார்.
இத்தேர்வில், தேர்ச்சி பெற 125 முதல் 135 மதிப்பெண்கள் கட் ஆப் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கல்லூரி சேர்க்கையின் போது இந்த கட் ஆப் மதிப்பெண்கள் 510- 520 எனற அளவில் இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.