NEET Exam application 2020: எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட இளங்கலை அளவிலான மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்ப படிவத்தை தேசியத் தேர்வு முகமை நாளை (திங்கள்- டிசம்பர் 2) முதல் வெளியிடுகிறது
Advertisment
தேர்வர்கள், nta.ac.in/ntaneet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று நாளை முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மட்டும் அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு, 2020ம் ஆண்டு மே 3-ம் தேதி நடத்தப்படும் என்றும், அதற்கான முடிவு ஜூன் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றர்வர்கள் சுகாதாரத் துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
நீட் 2019 ல் பத்துக்கும் மேற்பட்ட ஆள்மாறாட்டம் வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் 2020 க்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேசியத் தேர்வு முகமை இன்னும் கடுமையானதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், விவரங்கள் நாளை வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தான் தெரியவரும்.
மூன்று மணி நேரம் கொண்ட நீட் தேர்வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. மொத்தம் 180 கேள்விகளில் 90 கேள்விகள் உயிரியல் பாடத்தில் இருந்தும், 45 கேள்விகள் இயற்பியல்/வேதியியலில் இருந்து கேட்க்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மொத்த மதிபெண்ணில் ஒரு மதிப்பெண் கழிக்கப்படுகிறது.