Advertisment

NEET 2021: கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள் எவை?

NEET Exam Previous Year Question paper NEET Exam Syllabus: இயக்கவியல், நவீன இயற்பியல், மின்சாரம் ஆகிய 3 தலைப்புகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது

author-image
WebDesk
New Update
NEET 2021: கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள் எவை?

நீட் தேர்வு 2021: பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற மருத்துவப் படிப்புகளுக்காக இந்திய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. வருடத்துக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சகமும், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமும் விவாதங்கள் நடத்தி வரும் காரணத்தினால் நீட் தேர்வுக்கான தேதி அறிவிப்பு தாமதமாகியுள்ளது.

Advertisment

2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள  நீட் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை என என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்தது. எனினும், 2021 நீட் (இளங்கலை) தேர்வுத் தாளில் ஜேஇஇ (மெயின்) தேர்வைப் போன்று வினாக்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய ஆண்டு தேர்வு அட்டவணை மற்றும் சமீபத்திய நிகழ்வுகளின் அடிப்படையில், 2021 மே முதல் ஜூலை வரை தேர்வு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வுக்கு எப்படி தயாராகுவது? 

பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை என்பதால், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் உள்ள முக்கியமான  தலைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். முந்தைய ஆண்டு வினாத்தாட்கள் அடிப்படையில், அதிக மதிப்பெண்களைக் கொண்ட அத்தியாயங்கள் / தலைப்புகளை இங்கே காணலாம்.

உயிரியல் : தாவர உடலியல், மரபியல், சூழலியல் ஆகிய தலைப்புகள் அதிக மதிப்பெண்களைக் கொண்டுள்ளன. மதிப்பெண்கள் வெயிட்டேஜின் அடிப்படையில் மேற்கூறிய மூன்று அத்தியாயங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ​​தாவர  கட்டமைப்பு, உயிரணுக் கொள்கை, உயிரணு  சுழற்சி, உயிரியல் பன்முகத்தன்மை போன்ற அத்தியாயங்களும் அதிக மதிப்பெண்களைக் கொண்டுள்ளன. தேர்வர்கள், முந்தைய ஆண்டு வினாத்தாட்களை  பார்வையிடுவது சிறந்ததாக அமையும்.

இயற்பியல்: இயக்கவியல், நவீன இயற்பியல், மின்சாரம் ஆகிய 3 தலைப்புகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. உண்மையில், மொத்த கேள்விகளில் 42 சதவிகித  கேள்விகள் இயக்கவியல் பாடத்தில் இருந்து கேட்கப்படுகிறது.

வேதியியல்: 11 மற்றும் 12 ஆம்  வகுப்பு பாடப்பிரிவில் உள்ள கரிம வேதியியல் அல்லது சேதன இரசாயனம் (Organic Chemistry)  அதிக முக்கியத்துவம் பெறுகிறது. நீட் தேர்வின் முந்தைய ஆண்டு வினாத்தாட்களில் 27 சதவீத கேள்விகள் கரிம வேதியியலில் இருந்து கேட்கப்பட்டன.  அதேபோன்று, இயற்பிய வேதியியல் (Physical chemistry) பாடப்பிரிவும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

2021-ஆம் ஆண்டு நீட் (இளங்கலை) தேர்வுக்கான தேர்வு மாதிரி இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Neet Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment