NEET Exam 2022 answer key and results release soon: நீட் தேர்வுக்கான ஆன்சர் கீ இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வை 16 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: நல்ல காலேஜ் or நல்ல கோர்ஸ்? சாய்ஸ் ஃபில்லிங் நேரத்தில் இதை எல்லாம் கவனியுங்க!
இந்தநிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) UG 2022க்கான முடிவை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே நீட் ரிசல்ட்க்கு முன்னதாக, NTA உத்தேச விடைகளை வெளியிடும் என்று தெரிகிறது. இந்த ஆன்சர் கீ இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பதில்கள் தொடர்பாக ஆட்சேபனைகள்/சவால்களை எழுப்ப விண்ணப்பதாரர்களுக்கு சில நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகு, தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் அனைத்து ஆட்சேபனைகளையும் பரிசீலித்து, இறுதி ஆன்சர் கீ வெளியிடுவார்கள் மற்றும் அதன்படி முடிவு செய்வார்கள். தேர்வில் எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பிடப்பட்ட மதிப்பெண்களை ஆன்சர் கீ கொண்டு கணக்கிட முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil