NEET Exam 2022 answer key released: தேசிய தேர்வு முகமை (NTA) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET) ஆன்சர் கீ வெளியிட்டுள்ளது. ஜூலை 17 அன்று நடத்தப்பட்ட தேர்வுக்கான விடைக்குறிப்பை அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/ இல் சரிபார்க்கலாம்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET UG 2022 தேர்வு ஜூலை 17 அன்று நடைபெற்றது, அதன் முடிவு செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட உள்ளது. மொத்தம் 18.72 லட்சம் விண்ணப்பதாரர்கள் நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். NTA படி, 95 சதவீத மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். மருத்துவ நுழைவுத் தேர்வு இந்தியாவில் 497 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் 3,570 மையங்களில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: 10, 12 ஆம் வகுப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு; மத்திய அரசு திட்டம்
இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து குறியீடுகளுக்கும் நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்யலாம். விடை குறிப்புகளுடன், விண்ணப்பதாரர்களின் நீட் தேர்வு OMR விடைத்தாள்களையும் தேசிய தேர்வு முகமை வெளியிடப்படும். நீட் தேர்வு விடைத்தாள் மற்றும் OMR விடைத்தாள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் தங்களின் தோராயமான மதிப்பெண்களைக் கணக்கிடலாம். நீட் ஆன்சர் கீ-ஐ சவால் செய்ய விண்ணப்பதாரர்களுக்கு நேரம் வழங்கப்படும்.
ஆன்சர் கீ சரிபார்க்க
அதிகாரப்பூர்வ NEET UG இணையதளத்திற்கு செல்லவும் https://neet.nta.nic.in/
முகப்பு பக்கத்தில், ‘ஆன்சர் கீ, OMR விடைத்தாளின் ஸ்கேன் செய்யப்பட்ட படம் மற்றும் பதிவு செய்யப்பட்ட பதில் சவால்’ என்பதைக் கிளிக் செய்யவும்
இணைப்பை கிளிக் செய்யவும்
விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் அல்லது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
இப்போது விடைகுறிப்புகள் காண்பிக்கப்படும். அதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மதிப்பெண் திட்டத்தின்படி, ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும், அதேநேரம் தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். இந்த நீட் மதிப்பெண் திட்டம் மற்றும் சூத்திரத்தைப் பயன்படுத்தி, மாணவர்கள் தங்களின் மொத்த நீட் மதிப்பெண்களைக் கணக்கிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil