இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கான தேசியத் தகுதி நுழைவுத் தேர்வான நீட் 2023 தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வர்கள் ஆதார், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.
நீட் தேர்வு எழுதுபவர்கள் அனைவரும், நீட் தேர்வு 2023 ஹால் டிக்கெட்களை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். இணையம் மூலம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டியிருக்க வேண்டும்.
மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றின் ஒரிஜினல் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், புகைபடத்துடன் கூடிய ரேசன் அட்டை அல்லது மத்திய அரசால் வழங்கப்பட்ட, புகைபடத்துடன் கூடிய இதர வகை அடையாள அட்டை, இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
நீட் தேர்வு எழுதும் மாற்று திறனாளிகள், மத்திய, மாநில அரசுகளினால் அளிக்கப்படும் மாற்று திறனாளிகள் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட, பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படம் ஒன்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
நீட் தேர்வர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு செல்லும்போது, மறக்காமல் கட்டாயம் இவற்றை எடுத்துச் செல்லுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"