நீட் தேர்வு 2025-க்கு விணப்பம் பதிவு செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 7-ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இந்த சூழலில் கரெக்ஷன் விண்டோ விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக என்.டி.ஏ தெரிவித்துள்ளது. ஒருவேளை விண்ணப்பம் பதிவு செய்தவர்கள் அதில் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால், இந்த கரெக்ஷன் விண்டோ மூலம் அதனை திருத்திக் கொள்ளலாம்.
Advertisment
அதன்படி, மார்ச் மாதம் 9-ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதி வரை இந்த கரெக்ஷன் விண்டோவை பயன்படுத்த முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அனைத்து தகவல்களையும் அப்டெட் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் சிலவற்றை மட்டுமே திருத்திக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 11-ஆம் தேதி இரவு 11:50 மணி வரை இந்த ஆப்ஷனில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அதற்கு மேல் இதனை பயன்படுத்த முடியாது என்று என்.டி.ஏ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பத்தில் ஏதாவது தவறு செய்திருந்தால் அதனை திருத்திக் கொள்வதற்கு கடைசி வாய்ப்பாக இதை பயன்படுத்தலாம்.
அந்த வகையில் தந்தையின் பெயர் மற்றும் தொழில் அல்லது தாயார் பெயர் மற்றும் தொழிலை தவறாக குறிப்பிட்டிருந்தால், அதில் ஒன்றை மட்டுமே திருத்திக் கொள்ள முடியும். இதேபோல், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதி, பிரிவு, கையெழுத்து மற்றும் நீட் தேர்வை எத்தனையாவது முறை எழுதுகிறீர்கள் போன்ற விவரங்களை தவறாக குறிப்பிட்டிருந்தால், அதனையும் சரி செய்து கொள்ளலாம்.
Advertisment
Advertisements
மேலும், விண்ணப்பித்த நபரின் விலாசத்தை கருத்திற்கொண்டு தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த ஊரை மாற்ற முடியும். இதேபோல், ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகியவற்றில் எந்த மொழியில் தேர்வு எழுத விரும்புகிறீர்கள் என்பதையும் மாற்றிக் கொள்ள இயலும். மேற்கூறிய தகவல்களில் ஏதேனும் ஒன்றை மாற்றியமைத்தாலும், அதற்கு மேல் விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று திருத்தம் செய்வதற்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.