/tamil-ie/media/media_files/uploads/2017/08/NEET-Students1.jpg)
NEET 2019: மருத்துவ படிப்புகளில் இந்தாண்டில் சேர்வதற்காக தேசிய அளவிலான தகுதி நுழைவு தேர்வு (நீட்) வரும் 5ம் தேதி, பிற்பகல் 2 முதல் 5 மணி வரை ஒரேகட்டமாக நாடுமுழுவதும் 154 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
இத்தேர்விற்காக, இதுவரை ஹால் டிக்கெட் பெறாத மாணவர்கள் அல்லது ஹால் டிக்கெட்டை தொலைத்த மாணவர்கள், நீட் அதிகாரப்பூர்வ இணையதளமான ntaneet.nic.in சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில், ஹால் டிக்கெட் மற்றும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று கண்டிப்பாக கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வை, National Testing Agency தேசிய அளவில் நடத்த உள்ளது. இந்த அமைப்பு, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு dress codeயை வகுத்துள்ளது. ஆண், பெண் என இருபிரிவுகளாக dress code வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.