Advertisment

NEET UG 2023 Cut Off: அரசு கல்லூரியில் எம்.பி.பி.எஸ்; நீட் தேர்வு பி.சி கட் ஆஃப் 529? நிபுணர் கணிப்பு

கட் ஆஃபை முடிவு செய்வதில், சில காரணிகள் உள்ளன. அதில் இந்த வருடம் ரெஜிஸ்ட்ரேஷன் அதிமாகி உள்ளது. ஆனால் இது தமிழகத்தில் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET UG 2023 Cut Off

NEET UG 2023 Cut Off

இந்தியா முழுவதும் இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு கடந்த மே 7 அன்று மணிப்பூர் தவிர, நாடு முழுவதும் நடந்தது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.

Advertisment

இந்தாண்டு நீட் யுஜி கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

கட் ஆஃபை முடிவு செய்வதில், சில காரணிகள் உள்ளன. அதில் இந்த வருடம் ரெஜிஸ்ட்ரேஷன் அதிமாகி உள்ளது. ஆனால் இது தமிழகத்தில் இல்லை.

மருத்துவ படிப்புக்கான இடங்களை பொறுத்தவரையில், அகில இந்திய அளவில் 2 லட்சம் இடங்கள் அதிகமாகியிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் வெறும் 6 ஆயிரம் இடங்களை அதிகமாகி உள்ளன. இதனால் கட் ஆஃபில் எந்தவித தாக்கமும் இருக்காது.

தமிழகத்தில் இருக்கும் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளை பார்க்கையில் கடந்த ஆண்டை போலவே  இந்தாண்டும் 5,500 இடங்கள் உள்ளன.

இந்த காரணிகள் எதுவும் கட் ஆஃபில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால் கேள்வித் தாள்கள் இதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அந்தவகையில், கடந்தாண்டு நீட் இயற்பியல் தேர்வு எளிதாகவும், இந்தாண்டு கொஞ்சம் எளிதாகவும் இருந்தது. அதேபோல, வேதியியல் கேள்வித்தாள் சென்ற ஆண்டு கொஞ்சம் எளிதாகவும் , இந்தாண்டு கடினமாகவும் இருந்தது.

உயிரியல் கேள்வித்தாள் கடந்தாண்டு கடினமாகவும் இந்தாண்டு எளிதாகவும் இருந்தது. இதனால் ஒட்டுமொத்தமாக கட் ஆஃபில் 5 மதிப்பெண்கள் கூடலாம் என்று எதிர்பார்ப்படுகிறது.

மற்றொரு காரணி என்னவெனில், சென்ற ஆண்டு ஜூலை மாதம் நீட் தேர்வு நடந்தது. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக நிறைய நேரம் கிடைத்தது. ஆனால் இந்தாண்டு மே மாதமே நீட் தேர்வு முடிந்து விட்டது. இதனால் பொதுத் தேர்வு முடிந்து, மாணவர்கள் தேர்வுக்கு தயாராக ஒரு மாதம் மட்டுமே அவகாசம் இருந்தது. இது தேர்வு முடிவிலும் எதிரொலிக்கும் என்பதால் இந்தாண்டு கட் ஆஃப் 5 மதிப்பெண்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

இதனால் கட் ஆஃப் பொறுத்தவரையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது.

தமிழகத்தில் இந்தாண்டு நீட் தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும்?

OC - 581

BC- 529

BCM- 504

MBC- 49

 SC-417

SCA 365

ST- 321

இது அவதாணிப்பு மட்டுமே. ஆனால் பெரும்பாலான எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் 400 மதிப்பெண்களை இலக்காக வைத்து உயிரியல் பாடத்தில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அதனால் எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் கட் ஆஃப் 10 மதிப்பெண்கள் கூடும் என்கிறார் கல்வியாளர் ரமேஷ் பிரபா.

இதுதொடர்பாக அவர் தனது Mentor Ramesh Prabha யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள முழுமையான தகவல்கள் இங்கே..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment