நீட் 2020 : விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு பிப்ரவரி 9ம் தேதி வரை அவகாசம்

2020 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப கடைசி தேதியை வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.

By: Updated: February 4, 2020, 06:40:27 PM

2020 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறையை வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.

விவரம்: 

2020 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த மாதம் ஜனவரி 6ஆம் தேதியோடு நிறைவடைந்தது. பின்பு, தேர்வர்கள் தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தில் இருக்கும் பிழைகளை திருத்தவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில்,  கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல், இந்த மாதம் 6ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறையில் சில பகுதியை முடித்து விட்டு பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு: எவ்வாறு படிப்பது ? வல்லுனர்களின் பதில்கள் இங்கே

இத்தகைய மானவர்கள் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பிப்ரவரி 9 ஆம் தேடி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


இவர்கள், வழக்கம் போல் nta.ac.in என்ற இணைய பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.நீட் 2020 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், 31.12.2003 க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். அதாவது 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பதிவு: விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் பதிவேற்றத்தை பரிசோதித்தல், விண்ணப்பக் கட்டணம் செலுத்துததல் போன்ற பல நிலைகள் உள்ளன.

நீட் 2020 : நுழைவுத் தேர்வுக்கு ஈஸியா ரெடியாவது எப்படி?

நீட் தேர்வுமுறை:  

நீட் (இளங்கலை) 2020 தேர்வு, சரியான விடையை தேர்ந்தெடுக்கும் முறையிலான அடிப்படையில் 180 வினாக்களை கொண்டதாக தேர்வுத்தாள் வடிவமைக்கப்பட உள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ( தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடங்களிலிருந்து இந்த வினாக்கள் தெரிவு செய்யப்பட்டும். நீட் தேர்வு வினாத்தாள், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Neet exam online application reopen till 9 february

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X