இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு எல்லா ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இதன்படி 2024-2025ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் விண்ணப்பப் பதிவு செய்வதற்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டது., இந்நிலையில் இந்த கால அவசாகம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. விண்ணப்ப பதிவை மேற்கொள்ளும் மாணவ- மாணவிகள் www.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.nic.in உள்ளிட்ட இணையதளங்களின் வாயிலாக நாளை இரவு 11.50 வரை விண்ணப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil