நீட் தேர்வில் குறைந்தது 180 மதிப்பெண்ணை அடைவது எப்படி?

NEET Important chapters: பிற  பாடங்களுக்கு கொடுக்கப்படும் அதே முன்னிரிமையை, நாம்  இயற்பியல் பாடத்திற்கு கொடுக்க வேண்டும்.

By: Updated: August 13, 2020, 09:37:22 PM

NEET Exam News In Tamil: தேசிய சோதனை முகமை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் 2020 நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறுவது குறித்து பல்வேறு  குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தாலும், தேர்வர்கள் சொல்லப்பட்ட தேதியில் தேர்வு நடைபெறும் என்ற நினைப்போடு, தேர்வுக்கான வேளையில் தீவிர கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிறப்பாக தயாராக, முதலில் நீட் தேர்வின் முக்கிய அம்சங்களை புரிந்துகொள்வது முக்கியம். நீட் தேர்வில் 180 கேள்விகள் இருக்கும். இயற்பியல், வேதியியல், விலங்கியல்,  தாவரவியல் போன்ற ஒவ்வொரு பாடப் பிரிவுகளிலும், 45 கேள்விகள் கேட்கப்படும். இதில்  மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தாவரவியல் பாடம் மிக முக்கியமானதாக  கருதப்படுகிறது.

இயற்பியல் – பயத்தை வெல்வோம்:

பயன்பாட்டு அடிப்படையிலான கேள்விகள் இருப்பதால் பல நீட் தேர்வர்கள் இயற்பியல் பாடத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்.  இத்தகைய பயம், மாணவர்களிடம் நிலவி வருவதால், பெரும்பாலான மாணவர்கள் இயற்பியல் பாடத்தை  முழுவதுமாக விட்டுவிடுகிறார்கள் (அ) மற்ற பாடங்களை புறக்கணித்து விட்டு இயற்பியல் பாடத்தில் அதிகப்படியான நேரத்தை செலவிடுகின்றனர்.

எனவே, முதலில் நம் மனதில் உள்ள அந்த அசாதாரண அச்சங்கள் களையப்பட வேண்டும்.  நீட் தேர்வில் சொல்லப்பட்டுள்ள பிற  பாடங்களுக்கு கொடுக்கப்படும் அதே முன்னிரிமையை, நாம்  இயற்பியல் பாடத்திற்கு கொடுக்க வேண்டும்.

பாடத்திட்டத்தை முறைப்படி பகுப்பாய்வு செய்ய வேண்டும்.  முக்கியதத்துவம் வாய்ந்த இந்த யுக்தியை  ஓவ்வொரு நீட் தேர்வர்களும் மேற்கொள்ள வேண்டும். 11-12 ஆம் வகுப்பு புத்தகத்தில் உள்ள 29 பாடப் பிரிவை தயார் செய்தாலே நாம் நீட் தேர்வில் இயற்பியல் கேள்விகளை எளிதாக சந்திக்கலாம்.

இயற்பியல்  பாடங்களில் உள்ள சில முக்கிய பாடப் பிரிவுகளின் பட்டியல் இங்கே

11ம்  வகுப்பு : work, power energy, rotational motion, thermodynamics, shm  போன்ற பாடப்பிரிவுகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.

12 ம்  வகுப்பு : capacitors, dc circuits, emi, wave optics, photoelectric effects, radioactivity, logic gates போன்ற பாடப்பிரிவுகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.

வேதியியல்: மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு அதிக மதிப்பெண் வாங்கும் பாடத்திட்டமாக  அறியப்படுகிறது. மாணவர்கள் என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களை இன்னும் ஒரு முறை படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நீட் தேர்வில் வேதியியல் பாடத்திற்கான வெயிட்டேஜ் (தோராயமாக) – 40% – Organic 40%- Physical, 20% -Inorganic என்ற அளவில் உள்ளது.

equilibrium, thermodynamics, electrochemistry kinetics, alkyl halides alcohols phenols aldehydes hydrocarbons, inorganic; complex compound p block elements போன்ற பாடப் பிரிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உயிரியல்: நீட் தேர்வின் முதுகெலும்பாகக் கருதப்படும் பாடத் திட்டம் உயிரியல். நீட் தேர்வின் 50 சதவீத கேள்விகள் உயிரியல் பாடங்களில் இருந்து கேட்கப்படுகின்றன. தேர்வுக்கு ,  என்சிஇஆர்டி புத்தகங்கள் பைபிளாக கருதப்படுகிறது.

morphology biological classification morphology in flowering plants plant physiology, genetics, ecology போன்ற பாடப் பிரிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தாதாக கருதப்படுகிறது.

விலங்கியல் பாடப்பிரிவில் animal diversity, a structural organisation in animals, cell biology and cell division, biomolecules, human physiology, human reproduction, and reproductive health போன்ற பாடப் பிரிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:How to get 180 marks in neet 2020

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X