Advertisment

நீட் தேர்வு முடிவில் ஏமாற்றமா... அடுத்து என்ன செய்யலாம்?

பெரும்பாலான தூதரக அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதாலும், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகவும் இந்தாண்டு பல மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தயங்கி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
நீட் தேர்வு முடிவில் ஏமாற்றமா... அடுத்து என்ன செய்யலாம்?

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 15 லட்சத்து 97 ஆயிரத்து 435 மாணவர்களில் 7 லட்சத்து  71 ஆயிரத்து 500 610 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 57 புள்ளி நான்கு நான்கு சதவீதம் பேர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணுக்கும் கூடுதலாகப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisment

தேசிய அளவில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 56 புள்ளி நான்கு நான்காக உள்ளது. தேர்ச்சி பெற்றவர்களில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1-1.5 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்பைத் தொடர்கின்றனர்.  எவ்வாறாயினும் இவ்வாண்டு, குறைவான மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்வார்கள் என்று கணிக்கப்படுகிறது. எனவே, மருத்துவ படிப்பகளில் சேர்வதற்கான கட் ஆஃப் மதிப்பெண்  அதிகரிக்கக்கூடும்.இதன் காரணமாக, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று,  தரவரிசைப் பட்டியலில் நல்ல இடம் கிடைக்காத மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்ந்தேடுக்க முடியாத நிலை உருவாகிறது.

பெரும்பாலான தூதரக அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதாலும், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகவும் இந்தாண்டு பல மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தயங்கி வருகின்றனர். மேலும்,  மேலும், தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்  ஆன்லைன் கல்வி முறையை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றன. அவ்வாறான நிலையில், வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் ”என்று ஆகாஷ் கல்வி நிறுவன இயக்குநர் அனுராக் திவாரி தெரிவித்தார்.

வித்யமந்திர் கல்வி நிறுவன இயக்குநர் சவுரப்குமார் கூறுகையில்,“பெரும்பாலான மாணவர்கள் அரசு பொது மருத்துவமனை கல்லூரிகளில் சேர விரும்புகின்றனர். இருப்பினும், வாய்ப்பு கிடைக்காத  மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  தங்களது படிப்பைத் தொடர்கின்றனர். ஆனால், இதற்கு மொத்தம் ரூ .80 லட்சம் முதல் ரூ .1 கோடி வரை செலவாகும். ஒருவர் பல் மருத்தவம் (அ) கால்நடை மருத்துவத்தை தேர்வு செய்யலாம்.  ஆயுஷ் அமைச்சகமும் பலவிதமான படிப்புகளை வழங்குகிறது. தரவரிசைப் பட்டியலில் 60,000க்கும் கீழ் உள்ள மாணவர்கள், நிர்வாக இடங்கள் (அ)  இளநிலைப் பட்டப்படிப்பைத் (பி . பார்பா) தேர்ந்தெடுப்பது சிறந்ததாக அமையும். பயோடெக்னாலஜி, நர்சிங், பிசியோதெரபி போன்ற பிஎஸ்சி படிப்புகளையும் முயற்சிக்கலாம். இல்லையேல், விலங்கியல், உயிரியல், வேதியியல் போன்ற துறைகளில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தும்  முதுகலை மட்டத்தில் நிபுணத்துவம் பெறலாம்” என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால், ஆர்வத்தை ஒருங்கிணைப்பது மிகவும் முக்கியமானது என்று திவாரி நம்புகிறார். "எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் 13 வது இடத்தைப் பெற்று, ஐ.ஐ.எஸ்.சி கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி மேற்படிப்பிற்கு சென்ற மாணவர்களையும் நாங்கள் கண்டிருக்கிறோம். நீட் தேர்வுக்கு தோன்றிய மாணவர்கள் அனைவரும் மருத்துவ படிப்பைத் தொடர விரும்புவதில்லை. 12 ஆம் வகுப்பில் உயிரியல் பிரிவைத் தேர்ந்தெடுத்த காரணத்தால் சிலர் நீட் தேர்வில் கலந்து கொள்கின்றனர். தேர்வில் தோன்றிய  சுமார் 15 லட்சம் மாணவர்களில், கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் தான் மருத்துவ படிப்புகளில் உண்மையான ஆர்வம் கொண்டவர்கள். இத்தகைய மாணவர்கள், தங்கள் கனவுகளை கைவிடக் கூடாது. மேலும், ஒரு வருடம் தயாராகுவது குறித்து தீவிரமாக சிந்திக்கலாம்,”என்றார்.

நிபுணத்துவ படிப்பு தான் மாணவர்களின் எதிர்காலம் என்று திவாரி  மேலும் தெரிவித்தார்.

நிபுணத்துவம் குறித்து, மோஷன் கல்வி நிர்வாக இயக்குனர் நிதின் விஜய் கூறுகையில், "கோர் அல்லாத துறையை மாணவர்கள் கசப்பாக உணரக் கூடாது. உயிர்  மருத்துவப் பொறியியல், பயோடெக்னாலஜி, பயோஸ்டேடிக், டெலிமெடிசின்  போன்ற துறைகள் இன்று உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. வேலை வாய்ப்பு சிறப்பாக உள்ளது என்றும் கணிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment