தேசிய தேர்வு முகமை, விடைக் குறிப்பையும், நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட ஓ.எம்.ஆர் விடைத்தாளையும், சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. தேர்வு எழுதிய மாணவர்கள் ஏதேனும் மறுப்பு இருப்பின் அது குறித்த கோரிக்கைகளை தெரிவிக்க கால அவகாசமும் (நேற்று மாலை வரை) அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சரியான இறுதி விடைக் குரிப்பயை என்.டி.ஏ தனது இணையதளத்தில் மீண்டும் வெளியிட உள்ளது.
முன்னதாக, அக்டோபர் 5 முதல் அக்டோபர் 7 வரை (மாலை 6 மணி வரை) விடைத்தாள்களில் தவறு இருந்தால் மாணவர்கள் திருத்தம் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் என்.டி.ஏ தெரிவித்தது.
இறுதி விடைக்குறிப்பு, ntaneet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் .
நீட் தேர்வு முடிவை எப்படி பார்ப்பது ?
ஸ்டேப் 1: ntaneet.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
ஸ்டேப் 2: நீட் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் பாஸ்வோர்டை செலுத்த வேண்டும்
ஸ்டேப் 3 : 2020 நீட் தேர்வை சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம்.
அகில இந்திய தரவரிசைப் பட்டியல், பொதுப் பிரிவு, ஓபிசி, எஸ்.சி / எஸ்.டி போன்ற பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல், தேர்வர்கள் பெற்ற மொத்த மதிப்பெண் ஆகியவை தேர்வு முடிவுகளில் வெளியிடப்படும்.
அக்டோபர் 12ம் தேதிக்கு முன்னதாக நீட் தேர்வுகளை வெளியிட தேசிய தேர்வு முகமை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்றது. கோவிட் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, தேர்வு மையங்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 3,843-ஆக அதிகரிக்கப்பட்டதுடன், ஒரு அறைக்கு 12 பேர் வீதமும், ஒரு மேசைக்கு ஒருவர் என்ற அடிப்படையிலும், தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,250 இடங்கள் உட்பட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில், இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil