நீட், ஜேஇஇ தேர்வு தேதிகள் அறிவிப்பு – களைக்கட்டும் செப்டம்பர் மாதம்

NEET, JEE Main 2020 Exam Date News Updates:  நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார். நீட் தேர்வு ,ஜெஇஇ மெயின் தேர்வும் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் தற்போது…

By: July 3, 2020, 8:14:16 PM

NEET, JEE Main 2020 Exam Date News Updates:  நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு ,ஜெஇஇ மெயின் தேர்வும் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்திருக்கிறது.


இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் என கூறியிருக்கிறார் மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால். ஏற்கனவே மே மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் செப்டம்பர் 13-ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ அட்வான்ஸ் மற்றும் மெயின் தேர்வுகளும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகள் செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் செப்டம்பர் மாதத்தில் தேர்வுகளுக்கான மாதமாக உருமாறி இருக்கின்றது. இந்த மாதங்களில் தான் நிலுவையில் இருக்கக் கூடிய பெரும்பாலான தேர்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Neet jee main exam date 2020 neet exam date jee exam date exams postponed till september

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X