மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருப்பவர்களும், இஞ்ஜினியரிங் படிப்புகளில் சேர ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பவர்கள் பயன்பெறும் வகையில், நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி ( NTA) ‘National Test Abhyaas’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜேஇஇ முதன்மை மற்றும் நீட் தேர்வுகளுக்காக தங்களை தயார்படுத்திக்கொள்ளும் மாணவர்கள் எளிதாக இந்த தேர்வுகளில் வெற்றி பெறும் பொருட்டு பல்வேறு பயிற்சித்தேர்வுகளை நடத்தும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், இந்த செயலியில் உள்ள பயிற்சித்தேர்வுகளை எந்தவித கட்டணமும் செலுத்தாமல், முழுவதும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். நீட், ஜேஇஇ மாணவர்கள் மட்டுமல்லாது, போட்டித்தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களும் இந்த செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
After receiving multiple requests from students regarding the preparation for competitive exams, I advised @DG_NTA to create an app that would aid students to prepare for these exams efficiently. pic.twitter.com/YHm8StNrGR
— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 19, 2020
நீட், ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இந்த செயலியில் 3 மணிநேர காலஅளவிலான வினாத்தாள் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் இதற்கு விடையளிக்க, விடையளிக்க உடனடியாக மதிப்பெண்களை பெறும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி செயற்கை நுண்ணறிவு திறன் அடிப்படையில் இயங்குவதால், மாணவர்கள் தேர்வின் எப்பகுதிக்கு அதிகநேரம் செலவிடுகிறார்கள் என்ற தகவலையும் மாணவர்கள் பெறும்வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அளவில் இந்த செயலி ஆண்ட்ராய்டு போன்களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஐபோன்களில் பயன்படுத்தும் வகையில் ஐஓஎஸ் வெர்சனிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 3 மணிநேரம் கால அளவிலான பயிற்சி தேர்வுகள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் தாங்கள் விரும்பும்நேரத்தில் இந்த தேர்வினை எழுதலாம். உடனடியாக மதிப்பெண்களை அறியலாம். சரியான விடைகளை விளக்கத்துடன் பெறலாம். எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பதையும் அவர்கள் அறியலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜேஇஇ முதன்மை தேர்வுகள் ஜூலை 18 முதல் 23ம் தேதிவரையிலும், நீட் தேர்வு, ஜலை 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.