தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) தேர்வு எழுதிய மாணவர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட ஓ.எம்.ஆர் விடைத் தாள் வெளியிடப்பட்டது. அக்டோபர் 5 முதல் அக்டோபர் 7 வரை (மாலை 6 மணி வரை) விடைத்தாள்களில் தவறு இருந்தால் மாணவர்கள் திருத்தம் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் என்.டி.ஏ தெரிவித்தது.
சவால் செய்யும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். தவறு இருப்பது உறுதியானால், பணம் மாணவர்களுக்கும் திரும்ப செலுத்தப்படும் .
நீட் ஓ.எம்.ஆர் தாளை டவுன்லோடு செய்வது எப்படி?
ஸ்டேப் 1: ntaneet.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்
ஸ்டேப் 2: ‘ஓ.எம்.ஆர் சவால்’ (OMR Challenge) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 3: யூசர் நம்பர் மற்றும் பாஸ்வோர்டை நிரப்ப வேண்டும்
ஸ்டேப் 4: 2020 நீட் ஓஎம்ஆர் தாளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம்.
நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகளை செப்.26-ம் தேதி தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரியான இறுதி விடைகள் அனைத்து தெரிவு பணிகளும் முடிவடைந்தவுடன், சோதனை முகமையின் இணையதளத்தில் மீண்டும் விடைக்குறிப்புகள் வெளியிடப்படும்
நீட் தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் 12ம் தேதிக்கும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil