Advertisment

NEET PG: கவுன்சிலிங் அட்டவணை வெளியீடு; புதிய மாற்றத்தை தெரிஞ்சுக்கோங்க

கவுன்சிலிங்கில் முதல் 2 சுற்றுக்கு பிறகு, மாப்-அப் சுற்று,stray vacancy சுற்று என மொத்தம் 4 சுற்றுகள் நடைபெறவுள்ளன. 2021 முதல், முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், இரண்டாவது சுற்று முடிந்த பிறகு அந்தந்த மாநிலங்களுக்கு எந்த காலி இருக்கையும் திருப்பி அனுப்பப்படாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET PG: கவுன்சிலிங் அட்டவணை வெளியீடு; புதிய மாற்றத்தை தெரிஞ்சுக்கோங்க

நீட் முதுகலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நாளை (ஜனவரி 12) தொடங்கவுள்ள நிலையில், கலந்தாய்வு அட்டவணையை எம்சிசி தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த முறை, நீட் கவுன்சிலிங் நான்கு ரவுண்ட்களில் நடைபெறவுள்ளது. கவுன்சிலிங் தொடர்பான அட்டவணையின் விரிவான தகவலை எம்சிசியின் தளம் mcc.nic.in. இல் விண்ணப்பத்தாரர்கள் காணலாம்.

Advertisment

கவுன்சிலிங்கிற்கான ரெஜிஸ்ட்ரேஷன் பிராசஸ் ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிறது. ரவுண்ட் 1 ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஜவனரி 17 வரை நடைபெறவுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் முதலில் ரெஜிஸ்டர் செய்தி வேண்டும். அதன்பிறகு, விருப்பமான கல்லூரி இருக்கையை ஜனவரி 17க்கு முன்னர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொடர்ந்து, ஜனவரி 18 முதல் ஜனவரி 19, 2022 வரை அந்தந்த கல்லூரிகளால் விண்ணப்பத்தாரர்களின் விவரம் சரிபார்க்கப்படும். இதைத் தொடர்ந்து ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இட ஒதுக்கீடு செயல்முறை நடைபெறும். இருக்கை முடிவு தொடர்பான இறுதிக்கட்ட அறிவிப்பு ஜனவரி 22, 2022 அன்று வெளியிடப்படும்.

இரண்டாவது சுற்றுக்கான ரெஜிஸ்ட்ரேஷன் பிப்ரவரி 3 முதல் 7 வரை நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள், பிப்ரவரி 12, 2022 அன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEET PG 2021 கவுன்சிலிங் அட்டவணை இரண்டு சுற்றுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கவுன்சிலிங்கில் முதல் 2 சுற்றுக்கு பிறகு, மாப்-அப் சுற்று,stray vacancy சுற்று என மொத்தம் 4 சுற்றுகள் நடைபெறவுள்ளன. 2021 முதல், முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், இரண்டாவது சுற்று முடிந்த பிறகு அந்தந்த மாநிலங்களுக்கு எந்த காலி இருக்கையும் திருப்பி அனுப்பப்படாது.

மத்திய அரசு மற்றும் எம்சிசி அறிவித்த புதிய OBC மற்றும் EWS இடஒதுக்கீடு கொள்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், அக்டோபர் 2021இல் நடைபெறவிருந்த முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் செயல்முறை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், டிசம்பர் 7, 2022 அன்று உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்களில் 27 சதவீத ஓபிசி கோட்டா மற்றும் 8 லட்சத்திற்கு குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு 10 சதவீத EWS ஒதுக்கீட்டு நடைமுறைக்கு ஆணையத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment