Advertisment

NEET PG 2023: முதுநிலை நீட் கட்-ஆஃப் பூஜ்ஜியமாகக் குறைப்பு; மருத்துவ அமைப்புகள் ரியாக்‌ஷன்

நீட் பி.ஜி 2023 தேர்வுக்கான தகுதி சதவீதத்தை அனைத்து பிரிவுகளுக்கும் 'ஜீரோ' ஆகக் குறைக்க மத்திய அரசு ஒப்புதல்; மருத்துவ அமைப்புகளின் எதிர்வினைகள் இங்கே

author-image
WebDesk
New Update
mbbs students

அனைத்து NEET முதுகலை ஆர்வலர்களும் இப்போது கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - விஷால் ஸ்ரீவஸ்தா)

கட்டுரையாளர் : Mridusmita Deka

Advertisment

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முதுகலை (NEET PG) 2023க்கான தகுதிச் சதவீதத்தை அனைத்துப் பிரிவுகளிலும் பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது. இதன் பொருள், NEET PG 2023 தேர்வில் பங்கேற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இப்போது முதுகலை மருத்துவ கவுன்சலிங் செயல்முறையில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

இது தொடர்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023 (NEET PG 2023)க்கான முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதத்தை குறைப்பதற்கான பரிந்துரை அமைச்சகத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: NEET PG 2023 cut-off reduced to zero for all categories, medical bodies react

"நீட் பி.ஜி 2023 தேர்வுக்கான தகுதி சதவீதத்தை அனைத்து பிரிவுகளுக்கும் 'ஜீரோ' ஆகக் குறைப்பதற்காக தகுதியான அதிகாரத்தின் ஒப்புதல் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது," என்று அறிக்கை கூறியது.

முன்னாள் தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினரும் டெல்லி மருத்துவ கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருமான டாக்டர் ஹரிஷ் குப்தா, அனைத்து மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத இடங்களை நிரப்பவும், முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், காலி இடங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.

"அனைத்து முதுகலை இடங்களுக்கான சேர்க்கை நீட் பி.ஜி கவுன்சிலிங் விதிமுறைகளின்படி நிரப்பப்படும்என்று கூறிய டாக்டர் ஹரிஷ் குப்தா, மாணவர்கள் ஏற்கனவே MBBS இன் கடுமையான பாடத்திட்டத்தை முடித்துவிட்டனர் என்றும் கூறினார்.

கட்-ஆப்பை பூஜ்ஜியமாகக் குறைக்கும் முடிவை கவுன்சிலிங் கமிட்டி மற்றும் நிர்வாக அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில், அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA) இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

FAIMA தலைவர் டாக்டர் ரோஹன் கிருஷ்ணன் ஒரு வீடியோ செய்தியில் கூறியதாவது: கட்-ஆஃப் 0 ஆக குறைக்கும் முடிவு இந்தியாவின் மருத்துவ கல்வி மற்றும் சுகாதார அமைப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளது. இது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஊழலையும், அதிக கட்டணத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும்.”

NEET முதுகலை கட்-ஆஃப் சதவீதம் பொது பிரிவினருக்கு 50 ஆகவும், PwD பிரிவினருக்கு 45 ஆகவும், ஒதுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 40 ஆகவும் இருந்தது.

சுவாரஸ்யமாக, பொதுப் பிரிவினருக்கான நீட் பி.ஜி கட்-ஆஃப் 2022ல் 50வது சதவீதத்தில் இருந்து 35வது சதவீதமாக குறைக்கப்பட்டது. பொது பிரிவு PwD தேர்வர்களுக்கான கட்-ஆஃப் 45 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி (எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி.,யின் PwD உட்பட), கட்-ஆஃப் 40ல் இருந்து 20வது சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கு இந்திய மருத்துவ சங்கம் செப்டம்பர் 13 அன்று எழுதிய கடிதத்தில், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை முதுநிலைப் படிப்பில் சேர்க்கும் வகையில் கட்-ஆஃப் அளவுகோலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இடங்கள் வீணாவதைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment