/indian-express-tamil/media/media_files/2025/06/08/jrhN11EIECxgrs5rf3Ut.jpg)
தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முதுகலை (NEET PG) முடிவுகளை அறிவித்துள்ளது. முதுகலை மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதிய விண்ணப்பதாரர்கள் இப்போது அதிகாரப்பூர்வ வலைத்தளமான natboard.edu.in ஐப் பார்வையிடுவதன் மூலம் தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக் கொள்ளலாம். தேர்வர்கள் சமர்ப்பித்த பதில்கள் எந்த சூழ்நிலையிலும் மறு மதிப்பீடு, மறு சரிபார்ப்பு அல்லது மறு கூட்டலுக்கு உட்பட்டவை அல்ல என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
நீட் பி.ஜி கட்-ஆஃப் என்பது அதிகாரிகளால் நிறுவப்பட்ட சதவீதத்தின் அடிப்படையில் தகுதி பெறுவதற்குத் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களைக் குறிக்கிறது. தகுதி கட்-ஆஃப்கள் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாறுபடும் மற்றும் தேர்வின் சிரம நிலை, தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் இந்தியா முழுவதும் கிடைக்கும் மொத்த முதுகலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்து மாறலாம்.
நீட் பி.ஜி கட் ஆஃப் 2025
2025 ஆம் ஆண்டுக்கான எம்.டி/ எம்.எஸ்/ டி.என்.பி/ டாக்டர் என்.பி (MD/MS/DNB/DrNB) (நேரடி 6 ஆண்டு படிப்புகள்) மற்றும் பி.ஜி மருத்துவ டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மற்றும் தகுதி அளவுகோல்களின்படி, தேசிய தேர்வு வாரியம் நீட் பி.ஜி தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை அறிவித்துள்ளது. பொது மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பு (EWS) பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50வது சதவீதத்தைப் பெற வேண்டும், இது 800 இல் 276 மதிப்பெண்களை குறிக்கிறது.
பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளி (PwBD) விண்ணப்பதாரர்களுக்கு, தகுதி அளவுகோல் 45வது சதவீதமாகும், கட்-ஆஃப் மதிப்பெண் 255 ஆகும்.
எஸ்.சி (SC), எஸ்.டி (ST) மற்றும் ஓ.பி.சி (OBC) பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தேர்வர்கள், குறைந்தபட்சம் 40வது சதவீதத்தைப் பெற வேண்டும், கட்-ஆஃப் 235 மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2024 இல் நீட் பி.ஜி கட்-ஆஃப்
2024 நீட் பி.ஜி தேர்வுக்கான பொதுப்பிரிவு அல்லது இ.டபுள்யூ.எஸ் பிரிவிற்கான தகுதி கட்-ஆஃப் சதவீதம் 50 சதவீதமாகவும், எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி (மாற்றுத்திறனாளிகள் உட்பட) 40 சதவீதமாகவும், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு 45 சதவீதமாகவும் இருந்தது.
2023 ஆம் ஆண்டில் நீட் பி.ஜி கட்-ஆஃப்
அனைத்து பிரிவுகளிலும் நீட் தகுதி சதவீதம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் பொதுப் பிரிவு தேர்வர்களுக்கான கட்-ஆஃப் 50வது சதவீதத்திலிருந்து 35வது சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான கட்-ஆஃப் 45வது சதவீதத்திலிருந்து 20வது சதவீதமாகக் குறைக்கப்பட்டது, மேலும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி (மாற்றுத்திறனாளிகள் உட்பட) மாணவர்களுக்கான கட்-ஆஃப் 40வது சதவீதத்திலிருந்து 20வது சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.