எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவை கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்தியாவில் உள்ள 153 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 35,000க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) எனப்படும் ஒரே சீரான நுழைவுத் தேர்வின் மூலம் நடத்தப்படுகிறது.
2020 ஆன்ம ஆண்டிற்கான முதுநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு (NEET - PG 2020 ) கடந்த ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 30ம் தேதியன்றே வெளியிடப்பட்டது.
தேர்வு எழுதிய ஒவ்வொரு தேர்வரின் நீட் ஸ்கோர் மற்றும் நீட் ரேங்க் வெளியிடப்பட்டது.
- பொது பிரிவு தேர்வர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் - 366
- எஸ்சி / எஸ்டி / ஓபிசி தேர்வர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் - 319
- UR-PWD தேர்வர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் - 342.
இந்த நீட் பஜி 2020 தேர்வெழுதிய 1,60,888 பேர்களில், 89,549 பேர் தகுதி பெற்றுள்ளனர் (அதாவது, 55 % பேர்). இதில், 41788 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள், 35,039 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 9,935 பேர் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள், 2,787 பேர் எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மாநிலம் வாரியாக தமிழகத்தில் இருந்து அதிகமான தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 11,681 மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்த பட்டியலில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
மருத்துவ கல்வி இயக்குனரகத்தால் வெளியிடப்படும் அகில இந்திய ரேங்க் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில ஒதுக்கீடு முதுநிலை மருத்துவ இடங்களுக்கான ரேங்க் பட்டியல் அந்தந்த மாநிலங்கள் வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.