/indian-express-tamil/media/media_files/2025/05/04/E2Mp5LIIhDFsMWRSYk3g.jpg)
NEET UG Result 2025 Date: தேசிய தேர்வு முகமை (NTA), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) எனப்படும் நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 14 ஆம் தேதிக்குள் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேர்க்கை பெற நீட் தேர்வு எனும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற வேண்டியது அவசியமாகும்.
இந்த நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நாடு முழுவதும் 22.7 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு இந்தியா முழுவதும் 557 நகரங்களில் 4,750 மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 3 அன்று தற்காலிக விடைக்குறிப்புகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அனைத்து வினாத்தாள் குறியீடுகளுக்கான நீட் விடைக்குறிப்புகளுடன் கூடுதலாக, தனிப்பட்ட விடைக்குறிப்புகளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதிக்குள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. தேர்வு முடிவுகளுடன் இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடப்படும். நீட் தேர்வு முடிவுகள் மற்றும் இறுதி விடைக்குறிப்புகள் ஆகிய இரண்டும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in இல் வெளியிடப்படும், இதனை விண்ணப்பதாரர்கள் தங்கள் உள்நுழைவு சான்றுகளை, அதாவது அட்மிட் கார்டு எண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்.
கடந்த ஆண்டு, நீட் தேர்வு மே 5 ஆம் தேதி 24 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்பட்டது. தற்காலிக விடைக்குறிப்பு மே 29 அன்று வெளியிடப்பட்டது, மேலும் மறுபரிசீலனை செய்வதற்கான நேரம் மே 31 வரை திறந்திருந்தது. தேர்வு முடிவுகள் ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டன. ஒரு சர்ச்சைக்குப் பிறகு ஜூன் 23 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது. திருத்தப்பட்ட முடிவுகள் ஜூலை 26 அன்று வெளியிடப்பட்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.