மணிப்பூரால் தாமதம் ஆகும் நீட் ரிசல்ட்: தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கையில் பாதிப்பை உருவாக்குமா?
மணிப்பூரில் எப்போது சூழ்நிலை சரியாகும்? எப்போது அங்கே நீட் தேர்வு நடத்தப்படும்,. அதற்கு பிறகு, எப்போது, நீட் ரிசல் வெளியிடப்படும். அதற்கு பிறகு, எப்போது நீட் தேர்வு ஆல் இந்தியா ரேங்க் வெளியிடப்படும் என்று மாணவர்கள் ஐயங்கள் கேள்விகள் உடன் காத்திருக்கிறார்கள்.
மணிப்பூரில் இரு இனங்களுக்கு இடையேயான கலவரம் காரணமாக, அந்த மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நீட் தேர்வுக்கான கீ விடை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நீட் ரிசல்ட் எப்போது வெளியாகும் என்று உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதனால், தமிழ்நாட்டில் மெடிக்கல் படிக்க வேண்டும் என்று இலக்காகக் கொண்டு நீட் தேர்வு எழுதி ரிசல்டுக்காக காத்திருக்கும் மாணவர்கள், பல்வேறு ஐயங்களுடன் காத்திருக்கிறார்கள்.
Advertisment
மணிப்பூரில் நீட் தேர்வு நடத்தப்பட்ட பிறகுதான், நீட் தேர்வு லிஸ்ட் வெளியிடப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மணிப்பூரில் எப்போது சூழ்நிலை சரியாகும்? எப்போது அங்கே நீட் தேர்வு நடத்தப்படும்,. அதற்கு பிறகு, எப்போது, நீட் ரிசல் வெளியிடப்படும். அதற்கு பிறகு, எப்போது நீட் தேர்வு ஆல் இந்தியா ரேங்க் வெளியிடப்படும் என்று ஐயங்கள் கேள்விகள் உடன் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.
இதனால், மணிப்பூர் கலவரத்தால், அம்மாநிலத்தில் நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், நீட் தேர்வு ரிசல்டு வெளியாக தாமதமாகிறது. இதனால், நீட் தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும், ரேங்க் லிஸ்ட்டில் இடம் கிடைக்குமோ? கிடைக்காதோ என்று ஐயத்துடன் இருக்கும் மாணவர்கள், தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், பொறியியல் படிப்புகளில் சேர்ந்தபின், அவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைத்தால் பொறியியல் படிப்பை விட்டு விட்டு செல்வதால், பொறியியல், அக்ரி, போன்ற படிப்புகளில் இடங்கள் காலியாவதால், நிஜமாக அந்த இடம் கிடைக்க வேண்டிய மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுகிறது என்று கல்வியாளர் கரியர் கன்சல்டண்ட் & அனலிஸ்ட் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.
கரியர் கன்சல்டண்ட் & அனலிஸ்ட், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, மணிப்பூர் கலவரத்தால் அம்மாநிலட்தில் நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ரிசல்டு வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து யூடியூப் சேனலில் மாணவர்களுக்கு விளக்கியுள்ளார்.
மணிபூரால் நீட் தேர்வு ரிசல் தாமதமாவதால், தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதனை தவிர்க்க, நீட் தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்கள், மெடிக்கல் சீட் கிடைக்கும் என்று உறுதியாக நம்புபவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து பிறகு, விலக வேண்டாம் என்று ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"