கொரோனா வைரஸ் போன்ற ஒரு பெருந்தொற்று காலத்தில்15 லட்சம் அதிகமான தேர்வர்களுக்கு நீட் தேர்வை நிர்வகிப்பது மத்திய அரசுக்கு சவாலானதாகும். சமூக விலகல் நெறிமுறைகளப் பராமரிக்க வேண்டி தேர்வு மையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குமாறு தேசிய தேர்வு முகமையிடம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிகிறது.
அரசு வழிகாட்டுதல்களின் படி, இரண்டு தேர்வர்களுக்கான இடைவெளியை குறைந்தது 2 மீட்டராக அதிகரிக்க தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.அதன் பொருட்டு, 15 லட்சம் நீட் தேர்வர்களுக்கு சுமார் 6,000 தேர்வு மையங்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது (முன்னதாக,3000 தேர்வு மையங்கள்).கடந்த ஆண்டுகளில்,குறைந்தது ஒரு மீட்டர் தூர அளவில் தேர்வர்கள் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.
பேப்பர்- பேனா முறையில் நடத்தப்படும் இந்த தேர்வு, நாட்டின் அனைத்து இளங்கலை மருத்துவ படுப்புகளில் சேருவதற்கான ஒரே தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாகவும் கருதப்படுகிறது. முன்னதாக மே 3-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட நீட் தேர்வு, முடக்கநிலை காரணத்தால், வரும் ஜூலை 26 அன்று நடத்தப்படுகிறது.
இதுவரை, ஒரே நாளில் இத்தனை மையங்களில் ஏதேனும் ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டதா ? என்பதே ஒரு பெரிய கேள்வி தான். கூடுதலாக, 3,000 தேர்வு மையங்களை அடையாளம் காண எங்களுக்கு ஒரு மாதமாகும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு வழக்கமாக கேந்திரியா வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் மாநில அரசு கல்லூரிகளில்(முன்னிரிமை அடிப்படையில்) நடத்தப்படும்.
பேப்பர்- பேனா முறையில் நீட் தேர்வு நடத்தப்படுவதால், நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரே கட்டமாக தேர்வு முடிக்கப்பட வேண்டும். எனவே, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது தவிர்க்க முடியாதது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகள் ஜுலை மாதம் 18, 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. ஆன்லைனில் பல கட்டங்கலாக இந்த தேர்வு நடப்பதால், இதற்கான தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையில்லை என்று தேசிய தேர்வு முகமை கருதுகிறது. தற்போதுள்ள 600 மையங்களோடு கூடுதலாக 150/200 புது தேர்வு மையங்களை அதிகரித்தாலே சமூக விலகல் நெறிமுறைகளை அடைய முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Neet test centres to double to maintain social distancing during the exam189845
குடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு!
‘நம்ம ஷிவானி எங்கே காணோம்?’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
Tamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் !
பூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்