Advertisment

NEET UG 2021: கவுன்சிலிங் பிராசஸ், கடந்தாண்டு மார்க் தெரிஞ்சுக்கோங்க!

நீட் 2021 கவுன்சிலங் செயல்முறை, கடந்தாண்டு கடஆஃப் மார்க், தேர்வில் தேர்ச்சிபெறவிட்டால் என்ன செய்வது போன்ற பல்வேறு தகவல்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

author-image
WebDesk
New Update
NEET UG 2021: கவுன்சிலிங் பிராசஸ், கடந்தாண்டு மார்க் தெரிஞ்சுக்கோங்க!

பல நாள்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நீட் தேர்வின் ஆன்சர் கீ, அக்டோபர் 15 ஆம் தேதி வெளியானது. விண்ணப்பதாரர்கள் என்டிஏ தளத்தில், ஆன்சர் கீயை பதிவிறக்கம் செய்து, நீட் தேர்வின் உத்தேச மார்க்கை கணக்கிட முடியும்.

Advertisment

நீட் ஆன்சர் கீ மீது கேள்வி எழுப்புவதற்கான கடைசி நாள் நேற்று நிறைவடைந்தது. விண்ணப்பத்தார்கள் எழுப்பிய கேள்விகளை, அதிகாரிகள் குழு பரிசீலினை செய்வார்கள். அவை சரியாக இருக்கும் பட்சத்தில், ஆன்சர் கீயில் மாற்றம் செய்யப்பட்டு, பைனல் ஆன்சர் கீ என்டிஏ தளத்தில் வெளியிடப்படும்.

15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர். நீட் மார்க் வெளியானதும், அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்

நீட் தேர்வு கடந்தாண்டு கட்ஆஃப் மார்க்

பிரிவு கட்ஆப் சதவிகிதம் கட்ஆஃப் மார்க் (2020) கட்ஆஃப் மார்க் (2019)
பொதுபிரிவு 50 % 720-147 701-134
எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி 40 % 146-113 133-107
பொது பிரிவு (ph) 45 % 146- 129 133-120
எஸ்சி,எஸ்.டி,ஓபிசி (ph) 40 % 128 -113 119-107

நீட் கவுன்சிலிங் பிராசஸ்

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது, கவுன்சிலிங் தொடர்பான தகவல்களை விண்ணப்பத்தாரர்கள் என்டிஏ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த அட்மிஷன் பிராசஸிஸ் பலரின் பங்களிப்பு உள்ளன. நீட் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுவது என்டிஏ-இன் பொறுப்பு ஆகும். நீட் கவுன்சிலிங் வழிமுறைகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

அகில இந்திய ஒதுக்கீடு: இரண்டு வகையான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. முதலில் 15% அகில் இந்திய ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங் நடைபெறும். பின்னர், மீதமுள்ள இருக்கைகளுக்கு மாநில அதிகாரிகள் கவுன்சிலங் நடத்துகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் 15% கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. அவர்கள், மாநில ஒதுக்கீடு கவுன்சிலிங்கில் தான் பங்கேற்க முடியும்.

டீம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள்: டிஜிஎச்எஸ் , டீம்/மத்திய பல்கலைக்கழகங்களில் இரண்டு சுற்றுகளில் கவுன்சிலிங்கை நடத்துகிறது, அதைத் தொடர்ந்து, ஒரு மாப்-அப் சுற்றும் நடைபெறும்.

ESIC கவுன்சிலிங்: Armed Forces Medical College Pune மற்றும் ESIC Medical College கலந்தாய்வுக்கு DGHS தான் பொறுப்பாகும். அந்த கல்லூரிகளில் சேர விரும்புவோர் DGHS போர்டலில் தான் பதிவு செய்ய வேண்டும்.

மாநில ஒதுக்கீடு: 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர். இந்த கவுன்சிலிங், இரண்டு அல்லது மூன்று சுற்றுகளில் நடைபெறும்.

தனியார் கல்லூரிகள்: மாநில இருக்கை ஒதுக்கீட்டுக்கு நடைபெறும் கவுன்சிலங்கை, போலவே தனியார் கல்லூரிகளிலும் நடைபெறும். காலியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, மூன்று முதல் நான்கு சுற்றுகளில் கவுன்சிலிங் நடத்தப்படலாம், அதைத் தொடர்ந்து ஒரு மோப்-அப் சுற்றும் நடத்தப்படும்.

தேவையான ஆவணங்கள்

நீட் கவுன்சிலங் செல்லும் மாணவர்கள் வைத்திருக்க ஆவணங்களை கீழே பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

  • நீட் அட்மிட் கார்ட் 2021
  • நீட் தேர்வு முடிவு அல்லது தரவரிசை பட்டியல்
  • 10ஆம் வகுப்பு சான்றிதழ்
  • 12ஆம் வகுப்பு சான்றிதழ்
  • அரசு வழங்கிய ஏதேனும் போட்டோ ஐடி
  • 6 முதல் 8 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • சாதி சான்றிதழ்( தேவைப்பட்டால் மட்டுமே)
  • உடல் இயலாமல் சான்றிதழ்( தேவைப்பட்டால் மட்டுமே)
  • தற்காலிக ஒதுக்கீட்டு படிவம்

மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் ஓரிஜனல் காப்பியும், நகலும் வைத்திருக்க வேண்டும்.

நீட் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை என்றால் என்ன செய்ய?

நீட்டில் தேர்ச்சி பெறதோர்களுக்கு இரண்டு வழி உள்ளன. முதல் வழி, மருத்துவர் ஆக வேண்டும் லட்சத்தியுடன் இருப்பவர்கள், அடுத்தாண்டு நீட் தேர்வு எழுதி கல்லூரியில் சேரலாம். நீட் தேர்வு எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

இரண்டாவது. மருத்துவ துறையிலே, நீட் தேர்வு கட்டாயம் இல்லாத ஏரளாமான பல படிப்புகள் உள்ளன. அவற்றை தேர்ந்தெடுத்து, உங்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment