நீட் தேர்வு 2021 முடிவுகளுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். தேசிய தேர்வுகள் முகமை இணையதளத்தில் விரைவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.
நீட் மார்க் வெளியானதும், அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதற்கு முன்னர், விரைவில் வெளியாகவுள்ள ஆன்சர் கீயை உபயோகித்து,மாணவர்கள் தங்களது உத்தேச மதிப்பெண்னை கணக்கீடு செய்து கொள்ளலாம்.
அகில இந்திய ஒதுக்கீடு இடங்களின் பிரிவு வாரியான விவரங்களை கீழே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்:
- பட்டியலின பிரிவு - 15 சதவிகிதம்
- பட்டியலின பழங்குடியின பிரிவு - 7.5 சதவிகிதம்
- PwBD- 5 சதவிகிதம்
- ஓபிசி Non- Creamy Layer - 27 சதவிகிதம் (தேசிய நிறுவனங்கள் அல்லது மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டும்)
- EWS - 10 சதவிகிதம் (தேசிய நிறுவனங்கள் அல்லது மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டும்)
நீட் 2021 தகுதி பெற்ற மாணவர்கள், கவுன்சிலிங் போது கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் (குறிப்பிடப்பட்டால்) உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்ப்புக்காக சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களுடன் மாணவர்கள் சுய அறிவிப்பையும் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசை பட்டியிலின் அடிப்படையில், மாணவர்களுக்கு கல்லூரிகளில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எய்ம்ய், ஜிப்மர் மற்றும் பிற மத்திய பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் டிஜிஎச்எஸ் நடத்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். அத்தகைய மாணவர்கள் நீட் 2021 முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு எம்சிசி இணையதளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும்.
அதே போல, டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்களிலும் நீட் கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேரலாம்.
இந்தாண்டு முதன்முறையாக நீட் ரெஜிஸ்டர் பிராசஸ் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பேஸ் 2 பதிவு ரெஜிஸ்டரை, நீட் ரிசலட் வெளியாகுவதற்கு முன்பு பூர்த்தி செய்ய வேண்டும்.அதற்கான ரெஜிஸ்டர் பிராசஸ் விரைவில் தொடங்கவுள்ளது. பேஸ் 2 பதிவு செய்யாதோர்களுக்கு, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil