Advertisment

NEET Results 2021: நீட் ரிசல்ட் செக் பண்ணுங்க; மதிப்பீட்டு முறையில் மாற்றம்!

NEET UG 2021: தேர்வு முடிவு, மதிப்பெண்களை தெரிந்துக் கொள்வது எப்படி? முழுதகவல்கள் இதோ...

author-image
WebDesk
New Update
NEET Results 2021: நீட் ரிசல்ட் செக் பண்ணுங்க; மதிப்பீட்டு முறையில் மாற்றம்!

லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலோடு காத்திருக்கும் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நீ. நீட் தேர்வு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

Advertisment

நீட் தேர்வு முடிவை வெளியிட மும்பை உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று நீட் தேர்வின் பைனல் ஆன்சர் கீ வெளியான சில மணி நேரத்தில், தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வர்கள், தேர்வு முடிவுகளை என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளத்தில் neet.nta.nic.in காணலாம். தேர்வு முடிவுகளுடன், கட் ஆஃப் மார்க், கட் ஆஃப் விகிதம், அகில இந்திய தரவரிசை பட்டியல் ஆகியவையும் வெளியிடப்பட்டிருக்கும். மாணவர்கள் அதன் அடிப்படையில், நீட் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

NEET UG 2021: தேர்வு முடிவு, மதிப்பெண்களை தெரிந்துக் கொள்வது எப்படி?

படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் - neet.nta.nic.in

படி 2: “முடிவு – NEET (UG) 2021” இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 3: NEET 2021 நுழைவுத் தேர்வுக்கான உங்கள் சான்றுகளை உள்ளிட்டு உள்நுழையவும்.

படி 4: NEET 2021 முடிவுகள் காட்டப்படும்

படி 5: பதிவிறக்கம் செய்த பிறகு எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

NTA ஆல் NEET UG முடிவுகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?

கட்-ஆஃப் மற்றும் மாணவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் என்டிஏ அகில இந்திய தகுதிப் பட்டியலைத் தயாரிக்கும். கட்-ஆஃப்-ஐ விட அதிகமாக மதிப்பெண் பெறுபவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு கவுன்சிலிங்கில் 15 சதவீதத்திற்கு தகுதி பெறுவார்கள். 15 சதவீதத்தில் அகில இந்திய ஒதுக்கீடு NEET 2021 ரேங்க் அடிப்படையில் மற்றும் MCI/NMC/DCI இன் சட்டப்பூர்வ ஒழுங்குமுறையின்படி மட்டுமே நிரப்பப்படும். 85 சதவீத சேர்க்கைக்கு, மாநிலங்கள் தனித்தனியாக கவுன்சிலிங் நடத்த வேண்டும்.

டை பிரேக்கிங் ஃபார்முலா(Tie Breaking Formula)

மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், அவர்களை தரவரிசைப்படுத்த டை பிரேக்கிங் பார்முலா பின்பற்றப்படுகிறது. முதன்முறையாக, இந்தாண்டு டை பிரேக்கிங்கில் விண்ணப்பதாரரின் வயது ஒரு காரணியாக கருதப்பட்டு வந்தது நீக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாணவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றால், அவர்களது மார்க்கை முடிவு செய்ய டை பிரேக்கிங் ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது.

உயிரியலில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அப்போதும், டை நீடித்ததால், அடுத்ததால் வேதியியலில் அதிக மதிப்பெண் கணக்கிடப்படும். அப்போதும் மார்க் டையாகும் பட்சத்தில், அனைத்து தேர்விலும் குறைவான அளவில் தவறான விடைகளை எழுதியவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment