தேசிய தேர்வு முகமை, நீட் 2021 தேர்வு முடிவுகளை இந்த வாரத்தில் வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை செப்டம்பர் 12 அன்று எழுதினர். ஆன்சர் கீ மீது கேள்வி எழுப்பும் கால அவகாசமும் முடிவடைந்துவிட்டது. எனவே, விண்ணப்பத்தாரர்கள் தேர்வு முடிவுகளை என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளத்தில் neet.nta.nic.in. விரைவில் காணலாம். தேர்வு முடிவு வெளியாகுவதற்கு சில மணி நேரம் முன்பு பைனல் ஆன்சர் கீ வெளியிடப்படும்.
Advertisment
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் நீட் 2021 கட்-ஆஃப் சதவிகிதம் மற்றும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். நீட் தேர்வு முடிவுகளுடன் கட்-ஆஃப் அறிவிக்கப்படும். பொது பிரிவினருக்கான கட்ஆஃப் மார்க் 50 சதவிகிதம் ஆகும்.
நீட் தேர்வு முடிவைபதிவிறக்கும் முறை
step 1: முதலில் என்டிஏ neet.nta.nic.in தளத்திற்கு செல்ல வேண்டும்
step 2: அதில், ‘view NEET (UG) result’ கிளிக் செய்ய வேண்டும்
step 3: லாகினுக்கு தேவையான ரோல் நம்பர், பிறந்ததேதி போன்ற தகவல்களை பதிவிட வேண்டும்.
step 4: நீட் ஸ்கோர் கார்ட் திரையில் தோன்றும்
step 5: தேர்வு முடிவு தேவைப்பட்டால் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
நீட் ரிசலட் 2021: ஸ்கோர் கார்டில் கவனிக்க வேண்டியது எவை?
விண்ணப்பத்தார்கள் ஸ்கோர் கார்டில் இடம்பெற்ற தகவல்களை செக் செய்ய வேண்டும். ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில், உடனடியாக என்டிஏ அதிகாரியை தொடர்புகொள்ள வேண்டும்.
தனிப்பட்ட விவரம்: விண்ணப்பத்தாரரின் பெயர், பெற்றோர் விவரம், பிறந்த தேதி, பிரிவு, உட்பிரிவு, பாலினம், குடியுரிமை
நீட் அப்லிகேஷன் நம்பர்
ரோல் நம்பர்
மொத்த மதிப்பெண்
பிரிவு வாரியாக மார்க்
சதவிகித மார்க்
நீட் அகில் இந்திய கோட்டா அட்மிஷன்
தகுதி நிலை
கட்ஆஃப் மதிப்பெண்
நீட் தேர்வு கடந்தாண்டு கட்ஆஃப் மார்க்விவரங்கள்
பிரிவு
கட்ஆப் சதவிகிதம்
கட்ஆஃப் மார்க் (2020)
கட்ஆஃப் மார்க் (2019)
பொதுபிரிவு
50 %
720-147
701-134
எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி
40 %
146-113
133-107
பொது பிரிவு (ph)
45 %
146- 129
133-120
எஸ்சி,எஸ்.டி,ஓபிசி (ph)
40 %
128 -113
119-107
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil