மருத்துவ ஆலோசனை குழு, இளநிலை மருத்துவ படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு செயல்முறையை இன்று(ஜனவரி 19) தொடங்கியுள்ளது.
கவுன்சிலிங் பிராசஸ் இன்று முதல் ஜனவரி 24 வரை நடைபெறவுள்ளது.தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எம்சிசி-இன் அதிகாரப்பூர்வ தளம் mcc. nic.in. இல் விண்ணப்பிக்கலாம்.
இந்த கவுன்சிலிங் மூலம் அரசு கல்லூரிகளில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு, அனைத்து டீம்டு அண்ட் மத்திய பல்கலைக்கழகங்கள், ESIC/AFMS நிறுவனங்கள், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இம்முறை நீட் கவுன்சிலிங் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மாப் அப் சுற்று, stray vacancy round என நான்கு சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
ரெஜிஸ்ட்ரேஷன் முடிந்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டியலிலிருந்து கல்லூரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். இருக்கை தேர்ந்தெடுக்கும் பிராசஸ் ஜனவரி 20 தொடங்கி ஜனவரி 24 அன்று முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருக்கை ஒதுக்கீடு செயல்முறை முடிந்ததும், ஜனவரி 29, 2022க்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
இதற்கிடையில், அந்தந்த மாநில கவுன்சிலிங் அதிகாரிகளால் மாநில கவுன்சிலிங்கின் முதல் சுற்று ஜனவரி 27 மற்றும் ஜனவரி 31, 2022 க்கு இடையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil