நீட் தேர்வு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. தேசிய தேர்வுகள் முகமை, விரைவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடவுள்ளன. அண்மையில், விண்ணப்பத்தாரர்களின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் 13 ஆம் தேதி வரை பேஸ் 1 மற்றும் பேஸ் 2 விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்ததும், ஆன்சர் கீ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாணவர்கள் அதனை உபயோகித்து உத்தேச மதிப்பெண்ணைக் கணக்கிட முடியும். கட்ஆஃப் மார்க் மூலம் கவுன்சிலிங்கில் எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
நீட் 2021 மார்க் மதிப்பீடு முறை
நீட் 2021 இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) ஆகியவற்றை குறித்து 180 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதில், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவுகளில் தலா 45 கேள்விகளும், உயிரியல் பிரிவில் 90 கேள்விகளும் இருக்கும்.
நீட் 2021 க்கான மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும் .ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். தவறான விடைக்கு, ஒரு மார்க் மைனஸ் செய்திட வேண்டும். கேள்விக்கு விடையளிக்கவில்லை என கூறி எவ்வித மார்க் குறைக்கப்படாது.
டை பிரேக்கிங் ஃபார்முலா(Tie Breaking Formula)
மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், அவர்களை தரவரிசைப்படுத்த டை பிரேக்கிங் பார்முலா பின்பற்றப்படுகிறது. முதன்முறையாக, இந்தாண்டு டை பிரேக்கிங்கில் விண்ணப்பதாரரின் வயது ஒரு காரணியாக கருதப்பட்டு வந்தது நீக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாணவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றால், அவர்களது மார்க்கை முடிவு செய்ய டை பிரேக்கிங் ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது.
உயிரியலில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அப்போதும், டை நீடித்ததால், அடுத்ததால் வேதியியலில் அதிக மதிப்பெண் கணக்கிடப்படும். அப்போதும் மார்க் டையாகும் பட்சத்தில், அனைத்து தேர்விலும் குறைவான அளவில் தவறான விடைகளை எழுதியவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil