NEET UG 2022 How to calculate cut off percentile, merit list, qualifying criteria: இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், கட் ஆஃப் சதவீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது, தகுதி கட் ஆஃப் சதவீதம் எவ்வளவு உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
தேசிய தேர்வு முகமை (NTA) இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET-UG) ஜூலை 17-ஆம் தேதி நடத்தியது. தேர்வில் 95% மாணவர்கள் கலந்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஆண்டு நீட் தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: NEET Exam Analysis; இயற்பியல், வேதியியல் கடினம்; தமிழக மாணவர்கள் கருத்து
இந்தநிலையில் நீட் தேர்வுக்கான கட் ஆஃப் சதவீத மதிப்பெண்கள் மற்றும் தகுதிகள் குறித்து இப்போது பார்ப்போம்.
ஒரு குறிப்பிட்ட கல்வியாண்டிற்கான இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தகுதி பெற, பொது பிரிவினர் மற்றும் EWS பிரிவினர் எனில், ஒரு விண்ணப்பதாரர் இளங்கலை பட்டப்படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட் தேர்வு) குறைந்தபட்சம் 50 சதவிகிதத்தில் மதிப்பெண்களைப் பெறுவது அவசியம்.
இருப்பினும், பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC-NCL) ஆகியோருக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40 சதவீதமாக இருக்க வேண்டும். பெஞ்ச்மார்க், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016 இன் கீழ் குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் உள்ள விண்ணப்பதாரர்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச மதிப்பெண்கள் பொதுப் பிரிவினர் மற்றும் EWS பிரிவினருக்கு 45 சதவிகிதம் மற்றும் SC/ST/OBC-NCL பிரிவினருக்கு 40 சதவிகிதம்.
சதவீத கணக்கீடு
இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் அகில இந்திய பொதுத் தகுதிப் பட்டியலில் பெற்றுள்ள அதிக மதிப்பெண்களின் அடிப்படையில் கட் ஆஃப் சதவீத மதிப்பெண்கள் தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு மாணவர் தனது NEET மதிப்பெண் மற்றும் அந்த குறிப்பிட்ட ஆண்டில் NEET தேர்வில் முதலிடம் பிடித்தவரின் மதிப்பெண்ணைக் கொண்டு தங்களின் NEET சதவீதத்தை எளிதாகக் கணக்கிட முடியும்.
NEET சதவீதம் = உங்கள் NEET மதிப்பெண் * 100 / முதலிடம் பெற்றவர்களின் NEET மதிப்பெண்
மாணவர்கள் தங்களின் NEET ரேங்க் மற்றும் குறிப்பிட்ட ஆண்டில் NEET தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையுடன் தங்கள் NEET சதவீதத்தையும் கணக்கிடலாம்.
NEET சதவீதம் = <(நீட் தரவரிசையில் தேர்வானவர்களின் மொத்த எண்ணிக்கை) / தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை> x 100
15% அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தகுதிப் பட்டியல் NEET (UG) - 2022 இல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் NTA ஆல் தயாரிக்கப்படும். வெற்றி பெற்றவர்களின் பட்டியல் சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவற்றிற்கு 15% அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் இடங்களை ஒதுக்கும் நோக்கத்திற்காக அனுப்பப்படும்.
NTA அகில இந்திய தரவரிசையை வழங்கும் மற்றும் முடிவுகள் DGHS, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும். 85% இடங்கள் மாநில அரசின் சேர்க்கை விதிகளின்படி நிரப்பப்படும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் NEET UG 2022 தேர்வில் சமமான மதிப்பெண்கள்/சதவீத மதிப்பெண்களைப் பெற்றால், இடைநிலைத் தகுதி (டை பிரேக்கர்) பின்வருமாறு தீர்மானிக்கப்படும்:
தேர்வில் உயிரியலில் (தாவரவியல் & விலங்கியல்) அதிக மதிப்பெண்கள்/சதவீத மதிப்பெண்களைப் பெறுபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வில் வேதியியலில் அதிக மதிப்பெண்கள்/சதவீத மதிப்பெண்களைப் பெறுபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வில் இயற்பியலில் அதிக மதிப்பெண்கள்/சதவீத மதிப்பெண்களைப் பெறுபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வில் உள்ள அனைத்து பாடங்களிலும் தவறான பதில்கள் மற்றும் சரியான பதில்களுக்கு இடையே குறைவான விகிதத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வில் உயிரியலில் (தாவரவியல் & விலங்கியல்) பல தவறான பதில்கள் மற்றும் சரியான பதில்களுக்கு இடையே குறைவான விகிதத்தில் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வில் வேதியியலில் பல தவறான பதில்கள் மற்றும் சரியான பதில்களுக்கு இடையே குறைவான விகிதத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வில் இயற்பியலில் பல தவறான பதில்கள் மற்றும் சரியான பதில்களுக்கு இடையே குறைவான விகிதத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது அதிகம் உள்ள விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்ப எண்ணின் ஏறுவரிசை அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.