Advertisment

MBBS, BDS Counselling 2022; எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கவுன்சலிங் அட்டவணை வெளியீடு

NEET MBBS BDS Counselling 2022: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சலிங் அட்டவணை வெளியீடு; முதல் சுற்று கலந்தாய்வு அக்டோபர் 17 முதல் ஆரம்பம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Counselling

பொறியியல் கவுன்சிலிங் (பிரதிநிதித்துவ படம்)

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்க்கைப் பெறுவதற்கான கவுன்சலிங் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்சுற்று கலந்தாய்வு அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்குகிறது.

Advertisment

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 7 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பச் செயல்முறை கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 03.10.2022 என அறிவிக்கப்பட்டது. பின்னர் கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டு தற்போது அக்டோபர் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: கே.வி பள்ளிகளில் முதன்முறையாக கே.ஜி வகுப்புகள்; மாணவர் சேர்க்கை ஆரம்பம்

எனவே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://ugreg22.tnmedicalonline.co.in/mbbs22/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த விண்ணப்பச் செயல்முறை தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N22093621.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

இதற்கிடையே, மருத்துவ கவுன்சில் கமிட்டி (MCC) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2022 கவுன்சிலிங்கிற்கான கவுன்சிலிங் அட்டவணையை வெளியிட்டுள்ளது. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களால் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் மாநில கவுன்சிலிங் செயல்முறையை முடிக்க ஆணையம் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அந்தந்த மாநில கவுன்சிலிங் அதிகாரிகளால் முதல் சுற்று கவுன்சிலிங் அக்டோபர் 17 முதல் அக்டோபர் 28 வரை நடத்தப்படும். மாநில கவுன்சிலிங்கின் 2வது சுற்று நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 18 ஆம் தேதி முடிவடையும்.

அதேநேரம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான (AIQ) முதல் சுற்று கவுன்சிலிங் நடத்தப்படும். அக்டோபர் 11 முதல் 20 வரை MCC ஆல் நடத்தப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான (AIQ) இரண்டாவது சுற்று கவுன்சிலிங் நவம்பர் 2 முதல் 10 வரை நடத்தப்படும்.

MBBS சேர்க்கைக்கு மொத்தம் 4 சுற்று கவுன்சிலிங் நடைபெறும், மேலும் இரண்டு சுற்றுகள் அதாவது இரண்டாவது மாப்-அப் சுற்று மற்றும் BDS/ BSc நர்சிங் படிப்புகளுக்கான மீதமுள்ள காலியிட சுற்றுக்கான அட்டவணை MCC இணையதளத்தில் பின்னர் பதிவேற்றப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Neet Mbbs Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment