Advertisment

NEET UG 2023: கடந்த 5 ஆண்டுகளில் நீட் தேர்வு டாப் மதிப்பெண் என்ன?

நீட் தேர்வு: கடந்த 5 ஆண்டுகளில் முதலிடம் பெற்றவர் யார்? மதிப்பெண் எவ்வளவு?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET-Toppers

NEET UG 2023: கடந்த 5 ஆண்டுகளில் முதலிடம் பெற்றவர்கள் (கிராபிக்ஸ் - ஆங்ஷுமன் மைட்டி)

NEET UG 2023: இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) 2023 மே 7 அன்று மணிப்பூரைத் தவிர, நாடு முழுவதும் நடத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மற்றும் வேறு சில மையங்களில் ஜூன் 6-ம் தேதி மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

Advertisment

தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு விடைக்குறிப்பை வெளியிடும் முன், முந்தைய வருடங்களில் முதலிடம் பெற்றவர்கள் மற்றும் அந்த வருடங்களில் நடைபெற்ற நீட் தேர்வுகளில் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் எடுத்தார்கள் என்பதைப் பார்ப்போம்.

இதையும் படியுங்கள்: NEET 2023: நீட் தேர்வில் மார்க் குறைவா? டாப் 5 மெடிக்கல் கோர்ஸ் இங்கே

ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா OBC பிரிவில் இருந்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) முதலிடம் பிடித்த முதல் நபர் ஆவார். அவர் 2022 இல் முதல் தரவரிசையைப் பெற்றார். தேர்வில் 720-க்கு 715 மதிப்பெண்களைப் பெற்றார், மேலும் தற்போது டெல்லி எய்ம்ஸில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.

publive-image
NEET UG 2022 ஆண்டுகளில் முதலிடம் பிடித்தவர் - தனிஷ்கா (கோப்பு படம்)

2021 ஆம் ஆண்டு நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மிருணாள் குட்டேரி, மருத்துவத் துறை சமூகத்திற்குச் சேவை செய்ய ஒரு சிறந்த வாய்ப்பைத் தரும் என்பதை உணர்ந்த பிறகு, 9 ஆம் வகுப்பில் மருத்துவராவதற்கு முடிவு செய்தார். அவர் 2021 நீட் தேர்வில், 720க்கு 720 என முழு மதிப்பெண் பெற்றார்.

publive-image
NEET UG 2021 ஆண்டுகளில் முதலிடம் பெற்றவர் - மிருணாள் (கோப்பு படம்)

ரூர்கேலாவைச் சேர்ந்த சோயப் அஃப்தாப் 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 720 மதிப்பெண்களுடன் முதல் தரவரிசையைப் பெற்றார். இரண்டாவது தரவரிசையை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அகன்ஷா சிங் பெற்றார், அவரும் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்தார், ஆனால் சோயப்பை விட வயதில் மூத்தவர் என்பதால் இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

publive-image
NEET UG 2020 ஆண்டுகளில் முதலிடம் பிடித்தவர் - அகன்ஷா சிங் (கோப்பு படம்)

2019 ஆம் ஆண்டு நீட் தேர்வில் நிதின் கண்டேல்வால் 720 இல் 701 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தார். மேலும் அந்த ஆண்டு தனது வாரியத் தேர்வுகளில் 95.8 மதிப்பெண்களைப் பெற்றார். டாக்டர்கள் குடும்பத்தைச் சேர்ந்த நிதின் கண்டேல்வால், ராஜஸ்தானின் சிகார் பகுதியைச் சேர்ந்தவர்.

publive-image
NEET 2019 இல் முதலிடம் பெற்றவர் - நிதின் கண்டேல்வால் (கோப்பு படம்)

பீகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி 2018 ஆம் ஆண்டு நீட் தேர்வில் முதலிடம் பிடித்தார். அவர் இயற்பியலில் 180க்கு 171, வேதியியலில் 180க்கு 160, உயிரியலில் (உயிரியல் மற்றும் விலங்கியல்) 360க்கு 360 மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண்களை 720க்கு 691 ஆகக் கொண்டு வந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment