scorecardresearch

NEET 2023 Cut off: அதிகரிக்கும் நீட் கட் ஆஃப்; நிபுணர்கள் கூறுவது என்ன?

நீட் கட் ஆஃப் அதிகரிக்கும் – நிபுணர்கள் கருத்து; கடந்த ஆண்டு நிலவரம் என்ன?

NEET students
நீட் தேர்வு (பிரதிநிதித்துவ படம்)

NEET UG 2023 Expected Cut Off: தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET UG 2023) மே 7 அன்று நடத்தியது. இந்த ஆண்டு நீட் தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்ததாக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருதுகின்றனர். எனவே கட்-ஆஃப் கடந்த ஆண்டு கட் ஆஃப் அளவிலே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வுக்கான கட்-ஆஃப் இரண்டு வகையானது, அவை தகுதி கட்-ஆஃப் மற்றும் சேர்க்கை கட்-ஆஃப். நீட் சேர்க்கை கட்-ஆஃப் என்பது சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களைக் குறிக்கிறது, அதற்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படாது. தகுதி கட்-ஆஃப் என்பது ஒரு மாணவர் பெற வேண்டிய அதிகபட்ச மதிப்பெண் ஆகும்.

இதையும் படியுங்கள்: NEET 2023: எம்.பி.பி.எஸ் மட்டும் இல்லை; அதை தவிர இவ்ளோ மெடிக்கல் கோர்ஸ் இருக்கு!

வித்யாமந்திர் வகுப்புகளின் முதன்மை கல்வி அதிகாரி சௌரப் குமார் கருத்துப்படி, இந்த ஆண்டு கட்-ஆஃப் பொதுப் பிரிவினருக்கு 710-124 ஆகவும், ஓ.பி.சி பிரிவினருக்கு (OBC) 130-98 ஆகவும், பட்டியல் சாதியினருக்கு (SC) 120-95 ஆகவும், பட்டியல் பழங்குடியினருக்கு (ST) 118- 92 ஆகவும் இருக்கும்.

இதற்கிடையில், ஆகாஷ் பைஜூஸ் லைவ்வின் துணை பிராந்திய இயக்குனர் சர்வேஷ் சௌபே, நீட் தேர்வு கட் ஆஃப் சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். மேலும், “கடந்த ஐந்தாண்டுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், நீட் தேர்வு கட் ஆஃப் பொதுப் பிரிவினருக்கு 716-120 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். OBC, SC மற்றும் ST மாணவர்களுக்கு, இது 119-95 வரை மாறுபடலாம். விண்ணப்பங்களின் எண்ணிக்கை, தேர்வெழுதுபவர்கள், தேர்வில் உள்ள சிரமம், விருப்பமான கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல மாறுபாடுகளின் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் உண்மையான கட்-ஆஃப் மாறுபடும் என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, பொதுப் பிரிவினருக்கான நீட் கட்-ஆஃப் மதிப்பெண்கள் 715-117 மதிப்பெண்களாகவும், SC / ST / OBC பிரிவினருக்கு 116-93 மதிப்பெண்களாகவும், பொது-PwD பிரிவினருக்கு 116-105 மதிப்பெண்களாகவும், SC / ST / OBC-PwD பிரிவினருக்கு 104-93 மதிப்பெண்களாகவும் இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Neet ug 2023 answer key result cut off likely to go high heres what experts predict