Advertisment

NEET 2023: எம்.பி.பி.எஸ் மட்டும் இல்லை; அதை தவிர இவ்ளோ மெடிக்கல் கோர்ஸ் இருக்கு!

நீட் தேர்வு; எம்.பி.பி.எஸ் தவிர மருத்துவம் சார்ந்த சிறந்த படிப்புகள் எவை?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Medical students

மருத்துவ மாணவர்கள் (பிரதிநிதித்துவ படம்)

நாடு முழுவதும் நீட் (NEET) தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், எம்.பி.பி.எஸ் மட்டுமல்லாது மருத்துவம் சார்ந்து என்னென்ன படிப்புகள் படிக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

Advertisment

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவை விரைவில் அறிவிக்கும், இருப்பினும் அதிகாரப்பூர்வ தேதிகள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்: NEET Exam 2023 Analysis: நீளமான கேள்விகள்; நேரத் தட்டுப்பாடு; திணறிய நீட் தேர்வர்கள்

நீட் தேர்வு என்பது இந்தியாவில் உள்ள மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ், BVSc மற்றும் AH கல்லூரிகளில் சேர்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஒரே தேசிய அளவிலான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வாகும்.

இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை (MBBS) படிப்பு மிகவும் பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட மருத்துவப் பாடமாக இருந்தாலும், மாணவர்கள் தேர்வுசெய்யக்கூடிய வேறு சில மருத்துவப் படிப்புகளும் உள்ளன.

அறிவியல் பின்னணியுடன் 12 ஆம் வகுப்பை முடித்த பிறகு, பல மாணவர்கள் மருத்துவத் துறையை தேர்வு செய்ய விரும்புகிறார்கள். எனவே எம்.பி.பி.எஸ் தவிர மாணவர்கள் கருத்தில் கொள்ளக்கூடிய சில மருத்துவப் படிப்புகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

இளங்கலை பல் அறுவை சிகிச்சை (BDS)

BDS என்பது பல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் ஒரு பிரபலமான மருத்துவப் படிப்பாகும். பாடநெறி காலம் பொதுவாக நான்கு ஆண்டுகள், அதைத் தொடர்ந்து ஒரு வருட இன்டர்ன்ஷிப். படிப்பை முடித்த மாணவர்கள் தகுதிவாய்ந்த பல் மருத்துவர்களாகி மருத்துவமனைகள், பல் மருத்துவ மனைகளில் பணியாற்றலாம், அல்லது தனியாக கிளினிக்கில் சிகிச்சை அளிக்கலாம்.

இளங்கலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BSMS)

BSMS என்பது இளங்கலை ஆயுஷ் படிப்பாகும், இது ஐந்தரை ஆண்டுகள் நீடிக்கும். படிப்பை முடித்தவர்கள் சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களாக பணிபுரிகின்றனர். BSMS படிப்புகளுக்கான சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டது. BSMS படிப்புகளுக்குத் தகுதிபெற, விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BAMS)

BAMS என்பது பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் கவனம் செலுத்தும் பிரபலமான மருத்துவப் படிப்பு. இதில் சேர்க்கை பெற நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். பாடநெறி காலம் பொதுவாக ஐந்தரை ஆண்டுகள் ஆகும், மேலும் இது உடற்கூறியல், உடலியல், மருந்தியல் மற்றும் நோயியல் போன்ற பாடங்களை உள்ளடக்கியது. படிப்பு முடிந்ததும், மாணவர்கள் தகுதிவாய்ந்த ஆயுர்வேத மருத்துவர்களாகி, மருத்துவமனைகள், கிளினிக்குகளில் பணியாற்றலாம் அல்லது தனியாக கிளினிக் ஆரம்பித்து சிகிச்சை அளிக்கலாம்.

இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BHMS)

BHMS என்பது ஹோமியோபதியில் கவனம் செலுத்தும் ஒரு மருத்துவப் படிப்பாகும், இது நோயாளிகளின் தனிப்பட்ட அறிகுறிகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் சிகிச்சையளிக்கிறது. இதில் சேர்க்கை பெற நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். பாடநெறி காலம் பொதுவாக ஐந்தரை ஆண்டுகள் ஆகும், மேலும் இது உடற்கூறியல், உடலியல் மற்றும் நோயியல் போன்ற பாடங்களை உள்ளடக்கியது. படிப்பு முடிந்ததும், மாணவர்கள் தகுதியான ஹோமியோபதி மருத்துவர்களாகி பணியாற்றலாம்.

இளங்கலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BUMS)

BUMS என்பது ஐந்தரை வருட இளங்கலை ஆயுஷ் படிப்பாகும், இது மருத்துவ சிகிச்சையின் யுனானி முறைகளில் கவனம் செலுத்துகிறது. பாடத்திட்டத்தில் கட்டாய ஒரு வருட இன்டர்ன்ஷிப் அடங்கும். BUMS படிப்பில் சேர தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் தங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் நீட் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். BUMS படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்ஆஃப் BHMS மற்றும் BAMS படிப்புகளைப் போன்றது, அதாவது, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 50 சதவிகிதம் மற்றும் இடஒதுக்கீடு வகை விண்ணப்பதாரர்களுக்கு 40 சதவிகிதம்.

இளங்கலை கால்நடை அறிவியல் (B.V.Sc)

B.V.Sc என்பது கால்நடை மருத்துவப் படிப்பில் கவனம் செலுத்தும் ஒரு சிறப்பு மருத்துவப் படிப்பு. இந்த பாடநெறி 5.5 ஆண்டுகள் நீடிக்கும் மற்றும் விலங்குகளின் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு மாணவர்களை தயார்படுத்துகிறது. B.V.Sc படிப்பை முடித்தவுடன், மாணவர்கள் கால்நடை மருத்துவர்களாக மாறுகிறார்கள். நீட் தவிர, பல மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளும், மாநில BVSc இடங்களுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படுகின்றன.

இளங்கலை பார்மசி (B.Pharm)

B.Pharm என்பது மருந்துகளை மையமாகக் கொண்ட ஒரு மருத்துவப் படிப்பாகும், இதில் மருந்துகள் மற்றும் மனித உடலில் அவற்றின் விளைவுகள் பற்றிய பாடங்கள் அடங்கும். பாடநெறி காலம் பொதுவாக நான்கு ஆண்டுகள் ஆகும், மேலும் இது மருந்தியல், மருந்து வேதியியல் மற்றும் மருந்தியல் போன்ற பாடங்களை உள்ளடக்கியது.

இளங்கலை பிசியோதெரபி (BPT)

BPT என்பது உடல் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு மருத்துவப் படிப்பு. பாடநெறி காலம் பொதுவாக நான்கரை ஆண்டுகள் ஆகும், மேலும் இது உடற்கூறியல், உடலியல் மற்றும் இயக்கவியல் போன்ற பாடங்களை உள்ளடக்கியது. நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் BPT படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. சில கல்லூரிகள் நீட் மதிப்பெண்களை ஏற்றுக்கொண்டாலும், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சொந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.

இளங்கலை தொழில் சிகிச்சை (BOT)

BOT என்பது தொழில்சார் சிகிச்சையில் கவனம் செலுத்தும் ஒரு மருத்துவப் பாடமாகும், இதில் காயங்கள் அல்லது இயலாமைகளில் இருந்து மக்கள் மீட்க உதவுவதன் மூலம், அன்றாடச் செயல்பாடுகளைச் செய்வதற்கான அவர்களின் திறனை மேம்படுத்தும் திறன்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது. பாடநெறி காலம் பொதுவாக நான்கரை ஆண்டுகள் ஆகும், மேலும் இது உடற்கூறியல், உடலியல் மற்றும் உளவியல் போன்ற பாடங்களை உள்ளடக்கியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment