நீட் தேர்வுக்கான விடைக்குறிப்பை (Answer Key) இந்த வாரம் தேசிய தேர்வு முகமை வெளியிடும். தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in/ இல் விடைக்குறிப்பை சரிபார்க்கலாம்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG) மே 7 அன்று நடத்தப்பட்டது. மொத்தம் 20,87,449 விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்தனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 499 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்: பொறியியல் மாணவர் சேர்க்கை: நல்ல கல்லூரி அல்லது நல்ல பிரான்ச்… எப்படி தேர்வு செய்வது?
இந்த நீட் தேர்வுக்கான விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை அமைப்பு இந்த வாரம் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆன்சர் கீ வெளியிடப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் விடைக்குறிப்புக்கு ஆட்சேபனைகளை தெரிவிக்க முடியும். அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு ரிசல்ட் மற்றும் இறுதி விடை குறிப்புகள் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு நீட் தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் கூறுகின்றனர். நீட் தேர்வில் இயற்பியல் பிரிவு NCERT அடிப்படையிலானது மற்றும் கணக்குகள் அடிப்படையிலான பலக் கேள்விகளைக் கொண்டிருந்தது. வேதியியல் பிரிவில், இயற்பியல் வேதியியலை விட கனிம மற்றும் கரிம வேதியியலுக்கு அதிக வெயிட்டேஜ் வழங்கப்பட்டது. விலங்கியல் மற்றும் தாவரவியல் வினாக்களில் அதிகளவு முக்கியமாக NCERT புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil