NEET UG 2023: தேசிய தேர்வு முகமை (NTA) 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) பதிவுகளை ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 இரவு 11:30 மணி வரை மீண்டும் திறக்க உள்ளது. இதுவரை தேர்வுக்கு பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் சாளரம் ஏப்ரல் 13 இரவு 11:59 வரை திறந்திருக்கும்.
இதையும் படியுங்கள்: NEET 2023: நீட் தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு விடையளிப்பது எப்படி?
"முன்பு பதிவு செய்து முடிக்க முடியாத அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், NEET (UG) - 2023 க்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது," என அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
NEET UG தேர்வு 2023: எப்படி விண்ணப்பிப்பது
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் — http://neet.nta.nic.in/
படி 2: முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: புதிய பதிவை கிளிக் செய்யவும்
படி 4: உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிடவும்
படி 5: பதிவு செய்தவுடன், உங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்
படி 6: விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்
படி 7: சேமித்து, சமர்ப்பித்து, கட்டணத்தைச் செலுத்தவும்
படி 8: எதிர்கால குறிப்புக்காக விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்
NEET UG 2023 தேர்வு மே 7 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 5:20 மணி வரை பேனா மற்றும் பேப்பர் முறையில் நடைபெறும். ஏப்ரல் 6 ஆம் தேதி மூடப்பட்ட பதிவு சாளரம் ஆர்வமுள்ள மாணவர்களிடமிருந்து பல கோரிக்கைகளைப் பெற்ற பிறகு மீண்டும் திறக்கப்படுகிறது. நாடு முழுவதும் 499 நகரங்களில் உள்ள பல்வேறு மையங்களில் NEET UG தேர்வு நடத்தப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil