NEET UG 2023 Counselling: MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. http://tnmedicalselection.net/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரிவு வாரியான பட்டியலை மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
தேசிய தேர்வு முகமை (NTA) ஜூன் 13 அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) UG 2023 முடிவுகளை அறிவித்தது. MBBS அல்லது BDS படிப்பில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, மையப்படுத்தப்பட்ட கவுன்சிலிங் செயல்முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் கலந்துக் கொள்ள வேண்டும். இளங்கலை மருத்துவம் / பல் மருத்துவப் படிப்புகளுக்கான 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மருத்துவ ஆலோசனைக் குழு (MCC)/ மருத்துவ சேவைகள் பொது இயக்குநரகம் (DGHS) மூலமும், 85 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்பப்படும்.
இதையும் படியுங்கள்: TN MBBS Counselling 2023: எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்காதா? இவ்ளோ ஆப்ஷன் இருக்கு – ஜெயபிரகாஷ் காந்தி விளக்கம்
நீட் கவுன்சிலிங் செயல்முறைக்குத் தகுதி பெற, பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத மதிப்பெண் தேவை, அதே சமயம் SC/ST/OBC விண்ணப்பதாரர்களுக்கு 40 சதவீத மதிப்பெண் தேவை. NEET முடிவுகளின் அடிப்படையில், தேசிய தேர்வு முகமை 15 சதவீத AIQ கவுன்சிலிங்கிற்கான தகுதி பட்டியலைத் தயாரிக்கிறது. 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு கவுன்சிலிங்கின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பற்றிய தகவலை அந்தந்த அதிகாரிகளுக்கு NTA வழங்குகிறது.
இந்த ஆண்டு, நீட் தேர்வை எதிர்த்து வரும் மாநிலமான தமிழ்நாடு, தேர்வின் முதல் 50 ரேங்க்களில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து, முதல் 10 இடங்களில் நான்கு மாணவர்களுடன் முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது அதிக மாநிலமாக உருவெடுத்துள்ளது. தற்போது முடிவு வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவக் கல்லூரிகளைப் பாருங்கள்.
தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் சேர்க்கை- சிறந்த மருத்துவக் கல்லூரிகள்
NIRF தரவரிசை 2023 | மருத்துவக் கல்லூரியின் பெயர் |
3 | கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி |
6 | அமிர்த விஸ்வ வித்யாபீடம் |
11 | சென்னை மருத்துவக் கல்லூரி & அரசு பொது மருத்துவமனை |
18 | சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் |
20 | SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி |
21 | ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
40 | PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
48 | செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமி |
தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் சேர்க்கை செயல்முறை
மொத்தம் நான்கு சுற்று கவுன்சிலிங் உள்ளன- சுற்று 1, சுற்று 2, மாப்-அப் சுற்று மற்றும் காலியிட சுற்று. கவுன்சிலிங் செயல்பாட்டின் போது, விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான கல்லூரிகளின் தேர்வுகளை சமர்ப்பிக்குமாறு கேட்கப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 500 ரூபாயும், மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1000 ரூபாயும் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.30 ஆயிரமும், மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.1 லட்சமும் செலுத்த வேண்டும். இடங்கள் ஒதுக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் மற்றும் சேர்க்கைக்கான பிற முறைகளை முடிக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.