NEET 2023 கவுன்சிலிங்: அகில இந்திய மற்றும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் 2023 விரைவில் தொடங்க உள்ளது. இந்தநிலையில், மாணவர்கள் முக்கியமாக வைத்திருக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) 2023 இன் முடிவுகள் ஜூன் 13 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்கள் மற்றும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் நடைபெறும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மருத்துவ சீட் பெற இந்த கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: NEET Counselling: நீட் கவுன்சிலிங்கில் எந்த ரேங்கிற்கு எந்த கல்லூரி கிடைக்கும்?
இந்தியாவில் மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு 15% மற்றும் மாநில ஒதுக்கீட்டுக்கு 85% எனப் பிரிக்கப்பட்டுள்ளன. MBBS மற்றும் BDS படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநிலங்கள் தாங்களாகவே நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றன. அதேநேரம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான நீட் கவுன்சிலிங்கை மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) நடத்துகிறது.
இந்தநிலையில், நீட் கவுன்சிலிங்கிற்கு செல்லும் மாணவர்கள் கையில் அவசியம் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணங்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.
தேவையான சான்றிதழ்கள்:
சாதி சான்றிதழ்
தற்காலிக அனுமதி கடிதம்
12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் தரவரிசை பட்டியல்
நீட் தேர்வு ஹால் டிக்கெட்
புகைப்படம் - 8
இருப்பிட சான்றிதழ்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil