NEET UG 2023 Counselling: மருத்துவ கவுன்சலிங் குழு (MCC) 2வது சுற்று கவுன்சிலிங்கிற்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET UG 2023) சீட் மேட்ரிக்ஸை வெளியிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ் ஆர்வலர்கள் MCC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சீட் மேட்ரிக்ஸைச் சரிபார்க்கலாம் - mcc.nic.in.
MCC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சுற்று 2 க்கு புதிதாக சேர்க்கப்பட்ட இடங்களின் PDF கோப்பை வெளியிட்டுள்ளது. இதில், இரண்டாவது சுற்றுக்கு 500க்கும் மேற்பட்ட இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: எம்.பி.பி.எஸ் கவுன்சலிங் 2-வது ரவுண்ட்: அரசு கோட்டாவில் இன்னும் 300 இடங்கள்?
இதனுடன், NEET UG கவுன்சிலிங் 2023 இன் சுற்று 2 க்கான 'தெளிவான காலியிடங்கள்' பட்டியலையும் MCC பதிவேற்றியுள்ளது.
NEET UG 2023 தேர்வு 2வது சுற்றுக்கான நிரப்புதல் நடந்து வருகிறது. விண்ணப்பதாரர்கள் பட்டியலிலிருந்து கிடைக்கும் படிப்புகள் மற்றும் இடங்களை சரிபார்த்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தேர்வு நிரப்புதல் செயல்முறையை முடிக்கலாம். அதன் பிறகு, MCC சீட் ஒதுக்கீட்டை செயல்படுத்தி ஆகஸ்ட் 18 அன்று முடிவை அறிவிக்கும்.
இதனிடையே, மக்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் கூறியதாவது: நாட்டில் தற்போது மொத்தம் 704 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள தமிழகத்தில் 74 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 70 மருத்துவக் கல்லூரிகளுடன் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், 68 மருத்துவக் கல்லூரிகளுடன் உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil