NEET UG 2023: இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) UG 2023க்கான கவுன்சிலிங் செயல்முறைக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டதும், அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளமான https://mcc.nic.in/#/home இல் கிடைக்கும்.
கவுன்சிலிங் செயல்முறை தொடங்கும் முன், மருத்துவப் படிப்பில் சேர உள்ள மாணவர்கள் தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். NEET UG 2023 கவுன்சிலிங்கிற்கு MBBS விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள்:
இதையும் படியுங்கள்: பட்டதாரி மருத்துவக் கல்வி விதிமுறைகள் வாபஸ்; மருத்துவ கவுன்சில் அறிவிப்பு
- அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை (ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை)
- NEET UG 2023 மதிப்பெண் அட்டை
- 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
- NEET UG 2023 ஹால் டிக்கெட்
- இடம்பெயர்வு சான்றிதழ்
- மருத்துவ தகுதி சான்றிதழ்
- சாதி, EWS, மாற்றுத்திறனாளி போன்ற பிரிவுச் சான்றிதழ்கள் (தேவைப்பட்டால்)
இதற்கிடையில், தேசிய மருத்துவ ஆணையம் (NMC) சமீபத்தில் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது, அதில் இயற்பியலில் பெற்ற மதிப்பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், அதைத் தொடர்ந்து வேதியியல் மற்றும் உயிரியலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன்னதாக, உயிரியலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து வேதியியல் மற்றும் பின்னர் இயற்பியல் மதிப்பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
தேசிய மருத்துவ ஆணையம் புதிய டை-பிரேக்கிங் விதிகளையும் வெளியிட்டுள்ளது, இது அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்.
தேசிய தேர்வு முகமை (NTA) ஜூன் 13 அன்று NEET UG 2023 முடிவுகளை அறிவித்தது, இதில் தமிழ்நாட்டின் பிரபஞ்சன் ஜே மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் போரா வருண் சக்ரவர்த்தி ஆகியோர் 99.99 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முதல் தரவரிசைகளைப் பெற்றனர். மொத்தம் 20.38 லட்சம் பேர் தேர்வு எழுதினர், அதில் 11.45 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil