இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், தேர்வு எப்படி இருந்தது என நிபுணர்கள் கூறும் கருத்துக்களை இப்போது பார்ப்போம்.
நீட் தேர்வில் உயிரியல் பாடங்களில் இருந்து கேள்விகள் எளிமையாக கேட்கப்பட்டதாகவும், அதேநேரம் இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்வுக்கு வழங்கப்பட்ட நேரம் போதவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: NEET Exam 2023 Analysis: இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினம்; நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் ரியாக்ஷன்
இந்தநிலையில் நீட் தேர்வு குறித்து நிபுணர்கள் கூறும் கருத்துக்களை இப்போது பார்ப்போம்.
இயற்பியல் பகுதி சற்று கடினமாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள் NCERT அடிப்படையிலானவை மற்றும் அனைத்து முக்கிய தலைப்புகளில் இருந்தும் சமமான அளவில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. சுமார் 78 சதவீத வினாக்கள் கணக்கு அடிப்படையிலானவை. பிரிவு பி கொஞ்சம் தந்திரமாக இருந்தது.
வேதியியல் அனைத்து பாடங்களிலும் மிகவும் கடினமானதாக மதிப்பிடப்படுகிறது. இயற்பியல் வேதியியலுடன் ஒப்பிடும்போது கனிம மற்றும் கரிம வேதியியலில் அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. கேள்விகள் NCERT அறிக்கைகள், உண்மைகள் மற்றும் வரைபடங்களின் அடிப்படையில் அமைந்தன. இரண்டு பிரிவுகளிலும் வலியுறுத்தல்-காரணம் வகை கேள்விகள் அறிமுகப்படுத்தப்பட்டன, இந்தக் கேள்விகளுக்கு கருத்துகளின் தெளிவு தேவை. வேதியியல் கேள்விகள் சற்று நீளமானதாக இருந்தது. ஆனால் கேள்விகள் முற்றிலும் NCERT அடிப்படையிலானவை.
தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆவரேஜ் அளவில் இருந்தது. தாவரவியலில் பெரும்பாலான கேள்விகள் நீண்டதாகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் வகையிலும் இருந்தன. பெரும்பாலான கேள்விகள் NCERT இல் கேட்கப்பட்டன, சில கேள்விகள் நேரடியாக விடையளிக்கும் வகையில் கேட்கப்பட்டு இருந்தன. விலங்கியல் பாடத்திலும், கேள்விகள் நீண்டதாகவும் நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் இருந்தன. சில கேள்விகள் தந்திரமாக இருந்தன. அனைத்து கேள்விகளும் NCERT அடிப்படையிலானவை. மனித உடலியல் (வகுப்பு 11) மற்றும் பயோடெக்னாலஜி மற்றும் இனப்பெருக்கம் (வகுப்பு 12) ஆகியவற்றிலிருந்து கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil